×

கம்பம் பகுதியில் நெற்பயிரைச் சுருட்டும் புகையான் நோய்

கம்பம், அக். 16: கம்பம் பகுதியில் நெற்பயிரில் புகையான் நோய் தாக்குதல் அதிகரிப்பின் காரணமாக விவசாயத்துறையினர் தகுந்த ஆலோசனைகள் இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளான லோயர்கேம்ப் முதல் வீரபாண்டி வரை சுமார் 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பில் இருபோக நெல் நடவு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக காமயகவுண்டன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, சுருளிப்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நெல் நடவுப்பணி மேற்கொள்ளப்பட்டது.
தற்போது இன்னும் ஒரு சில வாரங்களில் ஆங்காங்கே அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள நெற்கதிர்களில் புகையான் நோய் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதனால் பயிர்கள் கருகி மகசூல் பாதிக்கப்படுவதாக இப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், தற்போது தேனி மாவட்ட பகுதிகளில் பாசனத்திற்கு தேவையான தண்ணீர் வசதி போதுமானதாக உள்ளதால் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நெல் நடவுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள கதிர்களில் புகையான் நோய் தாக்குதல் காரணமாக விவசாயத்துறையினர் தகுந்த ஆலோசனைகள் இல்லாததால் கவலை அடைந்து வருகின்றோம்’’ என்றனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், இப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாக இருந்த விருமானூத்து ஓடையை ஆக்கிரமித்துள்ளது இல்லாமல் மணல் வளத்தையும் சுரண்டப்படுகின்றனர்.

இதனால் விவசாய நிலங்களில் உள்ள கிணறுகள் மட்டும் ஆழ்துளை கிணறுகளின் நீர்மட்டம் சரிந்தது விட்டன. இதனால் விவசாய நிலங்களில் விவசாயம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது’ என்று கூறினார். எனவே, மாவட்ட கலெக்டர் உடனடியாக இப்பகுதியில் மணல் திருட்டை தடுக்க வருவாய்த் துறையினரையும்,காவல்துறையினரையும் ரோந்து பணியினை தீவிரப்படுத்தி விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : palm area ,
× RELATED தேமுதிக பாளை பகுதி ஆலோசனைக் கூட்டம்