விதை விற்பனை கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

விழுப்புரம், அக். 16:  விழுப்புரம் மாவட்டத்தில் நெல் சாகுபடி பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதே சமயம் தரமற்ற விதைகளால் விவசாயிகள் பாதிப்பதாக ஆட்சியருக்கு பல்வேறு புகார்கள் வந்தன. இதனைத்தொடர்ந்து வேளாண்மை உற்பத்தி குழு கூட்டத்தில் ஆட்சியர் சுப்ரமணியன் துறை அதிகாரிகளுக்கு பல்வேறு உத்தரவுகள், அறிவுரை வழங்கினார். குறிப்பாக சான்றுகளுடன் கூடிய தரமான விதைகள் விவசாயிகளுக்கு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் வேளாண் இணை இயக்குநர் சண்முகம் தலைமையில், வேளாண்மைத்துறை மற்றும் விதைச்சான்றுத்துறை அலுவலர்கள் இணைந்து விதை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு கோலியனூர், மரக்காணம், மேல்மலையனூர், கள்ளக்குறிச்சி, சின்னசேலம் மற்றும் உளுந்தூர்பேட்டை வட்டாரங்களில் உள்ள தனியார் விதை விற்பனை நிலையங்களில் திடீர் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது சந்தேகத்திற்குரிய 45 விதை மாதிரிகள் சேகரிக்கப்பட்டு விதை பகுப்பாய்விற்கு முளைப்புத்திறன் குறித்து பரிசோதனை செய்ய அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து விதை ஆய்வு துணை இயக்குநர் மல்லிகா கூறுகையில், விதைகள் சட்டம் 1966ன்படி செயல்படாத தனியார் விதை விற்பனை நிலையங்களில் உள்ள ரூ.5 லட்சம் மதிப்புள்ள 10 டன் விதைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அங்கு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் விதை உரிமம் பெற்ற விற்பனை நிலையங்களில் உள்ள சான்று பெற்ற விதைகள் மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும். சாக்கு பைகளில் தமிழ்நாடு அரசு சான்றளிப்புத்துறையால் சான்றளிக்கப்பட்ட ஆதார நிலை அல்லது சான்று நிலை இதில் ஏதேனும் ஒன்றுடன் உற்பத்தியாளர் அட்டையும் சேர்த்து இரண்டு அட்டைகள் பொருத்தப்பட்டு விதைகளை வாங்க வேண்டும். இந்த அட்டையில் பயிர்ரகம், உற்பத்தியாளர் முகவரி இவற்றுடன் சான்றளிப்புத்துறையின் முத்திரை இருக்கும். விதை வாங்கும் முன்பு முக்கியமாக காலாவதி நாள், பருவத்திற்கு ஏற்ற ரகமா என்பதை விவர அட்டையின் மூலம் அறிந்து

வாங்க வேண்டும் என

ெதரிவித்தார்.

Related Stories: