×

சோத்துப்பாறை அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

ெபரியகுளம், அக்.16: பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீரை தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் திறந்து விட்டார். பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணை உள்ளது. இந்த அணையின் மொத்த உயரம் 126.28 அடியாகும். அணையின் கொள்ளளவு 100.22 மில்லியன் கன அடியாகும். சோத்துப்பாறை அணையிலிருந்து முதல்போக விவசாய சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. தேனி மாவட்ட கலெக்டர் பல்லவிபல்தேவ் தண்ணீரை திறந்து விட்டு பூக்களைத் தூவினார். அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 15 கன அடி உள்ளது. அணையிலிருந்து பெரியகுளம் குடிநீர் மற்றும் தற்போது பாசனவசதிக்காக 30 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. திறந்து விடப்பட்ட தண்ணீர் தாமரைக்குளம், பெரியகுளம், பாப்பையன்பட்டி கண்மாய்கள் வழியாக பழைய பாசனத்திற்கு 1825 ஏக்கர் நன்செய் நிலங்களும், புதிய பாசனத்திற்கு 1040 ஏக்கர் புன்செய் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.

இதனால் இப்பகுதியில் தென்கரை, தாமரைக்குளம், லெட்சுமிபுரம் பகுதி நிலங்கள் பாசனவசதி பெறுகின்றன. தண்ணீர் திறந்து விடப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்நிகழ்ச்சியில், கம்பம் எம்எல்ஏ ஜக்கையன், பெரியகுளம் நகராட்சி முன்னாள் சேர்மன் ஓ.ராஜா, அதிமுக ஒன்றிய செயலாளர் அன்னப்பிரகாஷ், பெரியகுளம் கோட்டாட்சியர் ஜெயப்பிரித்தா, தாசில்தார் ரத்தினமாலா, பொதுப்பணித்துறை மஞ்சளார் வடிநிலகோட்ட செயற்பொறியாளர் குமார், உதவி செயற்பொறியாளர்கள் கோகுலகண்ணன், தமிழ்ச்செல்வன் உட்பட விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : dam ,
× RELATED வைகை அணையில் தண்ணீர் திறப்பு குறைப்பு