டெங்கு இல்லாத மாவட்டமாக மாற்ற அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்

விழுப்புரம், அக். 16:  விழுப்புரம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை தடுப்பது குறித்து மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுக்கூட்டம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் நடந்தது. ஆட்சியர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். சுகாதாரத்துறை துணை இயக்குநர்கள் ஜெமினி, பாலுசாமி, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முனுசாமி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மகேந்திரன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டார மருத்துவ அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், நகராட்சி ஆணையர்கள் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் ஆட்சியர் சுப்ரமணியன் பேசிய

தாவது: விழுப்புரம் மாவட்டத்தில் டெங்கு இல்லாத சூழ்நிலையை உருவாக்க வேண்டும். இதற்கு அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்

கிணைந்து செயல்பட வேண்டும். டெங்கு மட்டுமல்ல எந்தவொரு காய்ச்சலாக இருந்தாலும் நம்மால்

கட்டுப்படுத்த முடியும்.

அதற்காகத்தான் இந்த மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுக்கூட்டம் நடக்கிறது. நமது மாவட்டத்தில் கடந்த ஆண்டு எடுத்த முயற்சியால் டெங்கு காய்ச்சலுக்கு யாரும் உயிரிழக்காத சூழல் ஏற்பட்டது. ஒருங்

கிணைத்து செயல்பட்டதால் இந்த முயற்சிக்கு வெற்றி கிடைத்தது.

வட்டார மருத்துவ அலுவலர்கள், பிடிஓ உள்ளிட்ட அதிகாரிகள் நாளை முதல் உங்கள் ஆய்வுப்பணிகளை துவக்க வேண்டும். தங்கள் பகுதிக்கு சென்று வீடு, வீடாக ஏடிஎஸ் கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். மக்கள் மத்தியில் விழிப்

புணர்வு ஏற்படுத்த வேண்டும். கடந்த ஆண்டு ஏற்

படுத்திய விழிப்புணர்வு முழுமை பெறவில்லை. அதிகாலையில் எழுந்து 3 மாதங்களுக்கு மேல் இந்த ஆய்வுப்பணிகளை நாம் செய்திருந்தோம். இதனால் ஓரளவிற்கு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு இதனை தீவிரப்படுத்த வேண்டும். டெங்கு பாதிப்பில்லாத மாவட்டமாக இருக்க பாடுபட வேண்டும். குறிப்பாக

பள்ளிகள், அங்கன்வாடி

களில்தான் மாணவ, மாணவிகள் அதிகநேரம் இருக்கிறார்கள். எனவே அங்கு கொசுக்களை உண்டாக்கக்கூடிய சுகாதாரமற்ற பொருட்களை அகற்ற வேண்டும். மாவட்ட கல்வித்துறை அதிகாரி தலைமை ஆசிரியர்கள் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். வருவாய்த்துறையினர் சினிமா தியேட்டர்களை ஆய்வு செய்ய வேண்டும். தொழிற்சாலைகள்துறை ஆய்வாளர் தொழிற்

சாலைகளில் ஆய்வு செய்து டெங்கு ஒழிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும். பெட்ரோல் பங்க்குகள், காவல்நிலைய வளாகங்

களில் தூய்மைப்பணிகள் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக காவல்நிலைய குடியிருப்புகள், காவல்

நிலையங்களில் பறிமுதல் செய்த வாகனங்களில் மழைநீர் தேங்கிநின்று கொசுக்கள் உற்பத்தியாகும். அந்த சூழ்நிலை இல்லாதவகையில் காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதிகாரிகள் ஆய்வு சென்றபோது மீண்டும் அந்த இடங்கள் அதே முறையில் பராமரிக்கப்

படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். ஒரு முறை அறிவுரை வழங்குங்கள். பின்னர் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் டெங்கு பாதிப்பில்லாத மாவட்டமாக மாற்றலாம். என்றார்.

Related Stories: