×

கழிப்பறை, உணவு இல்லாததால் மாணவர்கள் கடும் அவதி

விழுப்புரம், அக். 16: தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் விழுப்புரத்தில் நடந்த மண்டல அளவிலான நீச்சல் போட்டியில் வெளி மாவட்டங்களிலிருந்து வந்த மாணவ, மாணவி
களுக்கு கழிப்பறை, தங்குமிடம், உணவு போன்ற எந்தவித வசதி
களையும் செய்துகொடுக்கவில்லை. இதனால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
பள்ளிக்கல்வித்துறை சார்பில்
பாரதியார் தினம் மற்றும் குடியரசு தின விளையாட்டு போட்டிகள் மாவட்ட அளவில் நடத்தப்பட்டு தற்போது மண்டல அளவில் நடந்து வருகின்றன. விழுப்புரத்தில் கடந்த 12ம் தேதி மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் தொடங்கியது. கடலூர், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டு விளையாடி
வருகின்றன. தடகளப்போட்டிகள் முடிந்த நிலையில் நேற்று டேக்வாண்டோ மற்றும் ஜூடோ, நீச்சல் போட்டிகள் விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்திலுள்ள நீச்சல் குளத்தில் நடந்தது. இதில் இரு மாவட்டங்
களைச் சேர்ந்த சுமார் 800 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
போட்டிகளில் வெற்றிபெற்றவர்
களுக்கு சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டது. ஆனால் வெளி மாவட்டங்களிலிருந்து வந்த மாணவ, மாணவிகளுக்கு போதிய தங்குமிடம், உணவு போன்ற வசதிகள் முறையாக ஏற்பாடு செய்து கொடுக்காததாலும், கழிப்பறை, குளியலறை வசதி இல்லாததால் மாணவிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். முதல் நாள் மட்டும் தடகள போட்டியன்று மாணவ, மாணவிகளுக்கு குடிநீர், உணவு போன்ற வசதிகள் மாவட்ட பள்ளிக்
கல்வித்துறை சார்பில் ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது. அதனைத்
தொடர்ந்து மாணவ, மாணவிகளை கண்டுகொள்ளவே ஆளில்லாத நிலை ஏற்பட்டது. நேற்று நடந்த போட்டியில் குடிக்க கூட தண்ணீர் கொடுக்கவில்லை. இதனால் வீரர்கள், வீராங்கனைகள் பாழடைந்த குடிநீர் தொட்டி மற்றும் பேருந்து நிலையத்திற்கு சென்று காசு கொடுத்து குடிநீர்
வாங்கிய நிலை ஏற்பட்டது.
கழிப்பறை வசதிகளும் இல்லாததால் மாணவிகள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள். பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்படும் இந்த விளையாட்டு போட்டிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் துறை அதிகாரிகள் அதனை முறையாக பயன்படுத்தாமல் முறைகேடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மாணவ, மாணவிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளைக்கூட செய்து
கொடுக்கவில்லை என சமூக
ஆர்வலர்கள் புலம்பினர்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை