×

புதுச்சேரி சட்டசபைக்கு சபாநாயகர் வைத்திலிங்கம் சைக்கிளில் வந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆதரமற்ற குற்றச்சாட்டுகளை முதல்வர் கூறுகிறார்

புதுச்சேரி, அக் 16:  ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முதல்வர் கூறுவதாக கவர்னர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
கவர்னர் மாளிகையில் சிஎஸ்ஆர் நிதியில் ஊழல் நடைபெற்றுள்ளதாக முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியிருந்தார். இதனை கவர்னர் கிரண்பேடி மறுத்துள்ளார். இது குறித்து வாட்ஸ் அப்பில் கூறிருப்பதாவது:  
நிதி பரிமாற்றம் இல்லாமல் நேரடியாக பணியாற்ற முடியும். நாங்கள் நிதி பற்றாக்குறையால் உதவி செய்ய விரும்புவோரிடம் நிதியை ஒப்பந்ததாரர்களிடம் தரக்கூறி பணி செய்கிறோம்.
23 வாய்க்கால்களை 86 கிமீ தொலைவுக்கு தூர்வாரியுள்ளோம். அரசு செய்திருந்தால் ரூ. 10 கோடி செலவிட வேண்டியிருக்கும்.
இதில் அரசுக்கு செலவே ஏற்படவில்லை. இது நன்றியும், பாராட்டுக்கும் உகந்த நேரமே தவிர குற்றச்சாட்டு சொல்வதற்கு அல்ல.
இதுபோன்ற பணி பற்றி முதல்வர் இதுவரை அறியவில்லை என்று நினைக்கிறேன். தொடர்ந்து ஆண்டுதோறும் தூர்வார நிதி அளிக்கவும் முன்வந்துள்ளனர். அடுத்தடுத்த ஆண்டுகளில் தூர்வாரும் செலவுகுறையும். ராஜ்நிவாஸில் நிதி பரிமாற்றம் ஏதும் நடைபெறவில்லை.
ஆதாரமற்ற குற்றச்சாட்டை முதல்வர் சொல்கிறார், பொய் சொல்வது பாவம். பலரும் தாங்களாகவே முன்வந்து உதவ வருகின்றனர். அதை இல்லாதோருக்கு தருகிறோம்.
தற்போது 1500 துப்புரவு பணியாளர்களுக்கு புடவைகளை இதே முறையில் தருகிறோம்.
ராஜ்நிவாஸ் இணைப்பு பாலமாக இருக்கிறது. என்ஜிஓக்கள், உதவி செய்வோர்  சொந்த விருப்பத்தில்தான் வருகிறார்கள். ராஜ்நிவாஸ் தொடர்ந்து இருப்போருக்கும், இல்லாதவர்களுக்கும் இடையில் இணைப்பு பாலமாக செயல்படும்.  முதல்வருக்கு இதில் அனுபவம் இல்லாவிட்டாலும் கற்பதற்கு காலம் தள்ளிப்போகவில்லை. பாலமாக, இருக்க முதல்வர் அனுபவம் பட்டதில்லை. இனிமேலும் கற்கலாம். முதல்வரும் இதனை முன்னெடுத்து மக்களுக்கு நல்லது செய்து வளர்ச்சியடைய செய்வது அவசியம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Speaker ,Puducherry Assembly ,Chief Minister ,
× RELATED திராவிட மாடல் ஆட்சியின் ெபருமை...