×

கிறிஸ்தவ ஆலய பராமரிப்பிற்கு நிதியுதவி

சிவகங்கை, அக். 16: சிவகங்கை மாவட்டத்தில் கிறிஸ்தவ ஆலய பராமரிப்பிற்கு நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம சார்பில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்தில் சொந்த கட்டிடங்களில் இயங்கும் கிறிஸ்தவ ஆலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு நடப்பாண்டில் நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்த நிதி உதவி பெறுவதற்கு கிறிஸ்தவ ஆலயம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த கட்டிடத்தில் இயங்கி வர வேண்டும். ஆலயமும், ஆலயம் கட்டப்பட்ட இடமும் பதிவுத்துறையில் பதிவு செய்திருத்தல் வேண்டும். ஆலயத்தில் சீரமைப்பு பணிக்காக வெளிநாட்டில் இருந்து எந்தவித நிதி உதவியும் பெற்றிருத்தல் கூடாது.

சீரமைப்பு பணிக்காக ஒருமுறை நிதி உதவி அளிக்கப்பட்ட ஆலயத்துக்கு மறுமுறை நிதி உதவி 5ஆண்டுகளுக்கு பிறகு வழங்கப்படும். இதற்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் மற்றும் உரிய ஆவணங்களுடன் கலெக்டருக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பப் படிவத்தை < www.bcmbcmw.tn.gov.in > என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Christian ,
× RELATED கிறிஸ்தவ சபை ஊழியர்களை மிரட்டிய பாஜக...