×

திமுக உறுப்பினர் அட்டை வழங்கல்

இளையான்குடி, அக்.16:  இளையான்குடி மேற்கு ஒன்றிய திமுக மகளிரணியினருக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  செந்தமிழ் நகர், திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒன்றியச் செயலாளர் சுப.மதியரசன் தலைமை தாங்கினார். ஒன்றிய மகளிரணி நிர்வாகிகள் பஞ்சக்கிளி, தனலெட்சுமி மற்றும் ஊராட்சி செயலாளர்கள் தமிழரசன், அழகுராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பவானிகணேசன் உறுப்பினர் அட்டை வழங்கி கொடியேற்றினார். நிகழ்ச்சியில் ஒன்றிய துணைச் செயலாளர் மலைமேகு, தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி அன்பரசன், ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் ராஜபாண்டி உட்பட திமுக மகளிரணி உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags : DMK ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி