×

கடலூரில் மாற்று இடம் கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கடலூர், அக். 16:  கடலூர் திருப்பாதிரிபுலியூரில் சரவணா நகர் இணைப்பு சாலை திட்டத்திற்கு நத்தவெளி சாலை முக்கிய பங்கு வகித்துள்ளது. இந்நிலையில் இச்சாலை ஆக்கிரமிப்பு காரணமாக சரவணா நகர் இணைப்பு சாலை போக்குவரத்து பயன்பாட்டில் முழுமை பெறாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நத்தவெளி சாலை ஆக்கிரமிப்பை அகற்றும் பணியை பொதுப்பணித்துறை மேற்கொண்டனர்.
இந்நிலையில் ஆக்கிரமிப்பு அகற்ற அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வீடுகளை காலி செய்ய கால அவகாசம் கோரியதன் பேரில் ஆக்கிரமிப்பு அகற்றம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ேநற்று சம்மந்தப்பட்ட நத்தவெளி பகுதி மக்கள், மாணவர்கள் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க தலைவர் வைத்திலிங்கம் தலைமையில் பாதிரிக்குப்பம் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு தெரிவித்தும், மாற்று இடம் வழங்கும் வரை ஆக்கிரமிப்பு அகற்ற கூடாது என கோரிக்கை வைத்தனர். இதையடுத்து வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பாதிக்கப்பட்ட நத்தவெளி பகுதி மக்கள் தங்களுக்கு அரிசி பெரியாங்குப்பம், அல்லது திருவந்திபுரத்தில் மாற்று இடம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதிகாரிகளிடம் பேசி தீர்வு காணப்பதாக தெரிவித்ததின் பேரில் நத்தவெளி மக்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். வருகின்றனர்.

Tags : demonstration ,location ,Cuddalore ,
× RELATED கடலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை