×

வாடகை நெல் நடவு இயந்திரம் விவசாயிகள் பயன்பெறலாம்

கடலூர், அக். 16:   டெல்டா பாசன விவசாயிகள் வாடகை நெல்நடவு இயந்திரங்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவரது அறிவிப்பு:
கடலூர் மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறையின் மூலமாக வேளாண்மை இயந்திர மயமாக்கல் திட்டத்தின் கீழ் தனியார் தொழில் முனைவோர்களுக்கு மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் வழங்கப்பட்டு
வருகிறது. மானிய விலையில்  பெருமளவு நெல்நடவு இயந்திரங்களை பெற்ற அவர்கள் வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைத்து விவசாயிகளுக்கு வழங்கி வருகின்றனர்.
டெல்டா பகுதியிலுள்ள 9 வாடகை மையங்களில் நெல் நடவு இயந்திரம் வாடகைக்கு விடப்பட்டு வருகிறது. வாடகை மையம் செயல்பட்டு வரும் விவரங்களை  இணையதளத்திலும், சிதம்பரம் உபகோட்ட உதவி செயற்பொறியாளர் மூலம் தெரிந்து டெல்டா விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் உதவி ஆட்சியராக விசு மகாஜன் பொறுப்பேற்பு
சிதம்பரம், அக். 16:  கடலூர் மாவட்டம், சிதம்பரம் உதவி ஆட்சியராக ஐஏஎஸ் அதிகாரியான விசு மகாஜன் பொறுப்பேற்றார்.
சிதம்பரம் கோட்டாட்சியராக பணியாற்றி வந்த ராஜேந்திரன் திருப்பத்தூர் சர்க்கரை ஆலைக்கு மாவட்ட வருவாய் அதிகாரியாக பதவி உயர்வு பெற்று அங்கு பொறுப்பேற்றார். இந்நிலையில் 2016ம் ஆண்டில் ஐஏஎஸ் தேர்வு பெற்று பயிற்சிக்கு பின் டில்லி வடகிழக்கு மண்டலம் வளர்ச்சித் துறை உதவி செயலராக பணியாற்றிய விசு மகாஜன் சிதம்பரம் உதவி ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.
பஞ்சாப் மாநிலம், சண்டிகார் பகுதியை சேர்ந்த விசு மகாஜன் நேற்று சிதம்பரம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் உதவி ஆட்சியராக பொறுப்பேற்றார். அவருக்கு உதவி ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அசோக்ராஜ், சிதம்பரம் வட்டாட்சியர் தமிழ்செல்வன், மூத்த வருவாய் ஆய்வாளர் செல்வம் உள்ளிட்ட பலர் வாழ்த்து கூறினர். நேற்று திங்கள்கிழமை என்பதால் உதவி ஆட்சியரிடம் ஏராளமானோர் மனு அளிக்க
காத்திருந்தனர்.
 உதவி ஆட்சியர் மகாஜனிடம் நான்முனிசிபல் ஊராட்சியை சேர்ந்த தமிழரசி என்பவர் தனக்கு வழங்கப்பட்டு வந்த
முதியோர் உதவித்தொகை கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளதால் மிகவும் கஷ்டப்படுவதாக கூறி முதல் மனுவை அளித்தார். புகாரை பெற்ற உதவி ஆட்சியர் மனுவின் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Tags : rent rice plant ,
× RELATED கள்ள ஓட்டு போடுவதை தடுத்ததால் வீடு புகுந்து தாக்குதல்