×

தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

கடலூர், அக். 16:மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் தங்களது ஊனத்தின் தன்மையை தாமாக முன் வந்து தெரிவிக்கும் பட்சத்தில் அதனை படிவம் 6ல் குறிப்பிட்டு பெற்று அதன் அடிப்படையில்  வாக்கு பதிவு நாளன்று அவர்கள் எளிதில் வாக்குச்சாவடிக்கு சென்று எவ்வித இடையூறுமின்றி வாக்களிக்க போதிய வசதியினை ஏற்படுத்தி தர வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  
இது தொடர்பாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
தற்போது நடைபெற்று வரும் சிறப்பு சுருக்க திருத்த பணி 2019 காலகட்டத்தில்(1-9-2018 முதல் 31-10-2018 வரை) மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் வரும் 20ம் தேதி அந்தந்த சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற உள்ளது.
இந்த சிறப்பு முகாமின் போது வாக்காளராக பதிவு செய்திடாத மாற்றுத் திறனாளிகள் பெயர் சேர்ப்பதற்குரிய போதிய ஆதாரங்களுடன் படிவம் 6யை பூர்த்தி செய்து அளிக்கலாம். மேலும் ஏற்கனவே வாக்காளராக பதிவு பெற்ற மாற்றுத் திறனாளிகள் தங்களது அடையாள அட்டை மற்றும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையின் விவரத்தை வாக்குச்சாவடி நிலைய அலுவலரிடம் அளித்து தங்கள் ஊனத்தின் அளவினை பதிவு செய்து கொள்ளலாம். இதனடிப்படையில் வாக்களிக்க போதிய வசதி செய்து தரப்படும் என்று கூறியுள்ளார்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி முற்றுகை: மறியல்
சிதம்பரம், அக். 16:  கடலூர், நாகை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிடக்கோரி சிதம்பரத்தில் முற்றுகை மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 83 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிதம்பரம் சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் முற்றுகை போராட்டம் நடந்தது. போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சி நிர்வாகிகள் ராமச்சந்திரன், ரமேஷ்பாபு, கற்பனைசெல்வம், வாஞ்சிநாதன், இந்திய கம்யூனிட் கட்சி மாநில நிர்வாகி இந்திரஜித், மாவட்ட நிர்வாகக்குழு சேகர்,
தமிமுன்அன்சாரி, ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு குழு பரங்கிப்பேட்டை அருள்முருகன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விவசாய அமைப்பை சேர்ந்த பசுமைவளவன், தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்க செயலாளர் ரவீந்திரன், கான்சாகிப் பாசன விவசாயிகள் சங்க செயலாளர் கண்ணன்
உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட 54 பேரை சிதம்பரம் நகர போலீசார் கைது செய்தனர்.
இதே போன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மற்றொரு பிரிவினர் ராமலிங்கம் தலைமையில் சிதம்பரம் கஞ்சிதொட்டி அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  சாலை மறியலில் ஈடுபட்ட 29 பேரை போலீசார் கைது செய்தனர். சிதம்பரத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக 2 போராட்டங்களில் ஈடுபட்ட 83 பேர் கைது செய்யப்பட்டு திருமண மண்டபங்களில் தனித்தனியே தங்க வைக்கப்பட்டனர்.   
பண்ருட்டி:  பண்ருட்டியில் இந்திய கம்யூ., சார்பில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி வட்ட செயலாளர் சக்திவேல் தலைமையில் பயணியர் மாளிகையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு கும்பகோணம் சாலையில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்ட செயலாளர் சிறப்பு விருந்தினராக
கலந்துகொண்டு தபால்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதில் துணை செயலாளர் ராமனாதன், பாஸ்கர்,
நகர செயலாளர் குணசேகரன், மாவட்ட குழு
சிவக்குமார் மற்றும் பெண்கள் உட்பட 95 பேர் கைது
செய்யப்பட்டனர்.
திட்டக்குடி: திட்டக்குடி தாலுகாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வட்டாட்சியர் அலுவலகம் முன் சாலை மறியல் போராட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் நிதிஉலகநாதன் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு செல்வராசு முன்னிலை வகித்தார். முன்னாள் மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் வேணுகோபால் கண்டன உரையாற்றினார். சாலை மறியலில் ஈடுபட்ட 80 பேரை திட்டக்குடி இன்ஸ்பெக்டர் சுதாகர் தலைமையிலான  போலீசார் கைது
செய்தனர்.
விருத்தாசலம்:  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விருத்தாசலம் வட்ட செயலாளர் கலியபெருமாள் தலைமையில் உழவர் சந்தையிலிருந்து ஊர்வலமாக வந்து கடைவீதியிலுள்ள தபால் அலுவலகம் முன் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட 14பேரை விருத்தாசலம் போலீசார் கைது  செய்தனர். அதுபோல் நல்லூர் ஒன்றிய செயலாளர் நாராயணசாமி தலைமையில் பெண்ணாடம் பேருந்துநிலையத்தில் நடந்த மறியலில் 31 ஆண்களும், 11 பெண்களும் கைது
செய்யப்பட்டனர்.

Tags : voters ,
× RELATED சட்டமன்ற உறுப்பினர்கள்...