×

விபத்தில்A வாலிபர் பலி

வேப்பூர், அக். 16: வேப்பூர் அடுத்த திருப்பயர் கிராமத்தை சேர்ந்தவர் கனகராஜ்(26). இவர் கடந்த 12ம் தேதி வேலையை முடித்து விட்டு பைக்கில் வீட்டிற்கு சென்றார். சேலம்- விருத்தாசலம் தேசிய நெடுஞ்சாலையில் திருப்பயர் பஸ் நிறுத்தம் அருகே வந்த போது, பின்னால் வந்த கார் மோதியதில் படுகாயமடைந்தார். உடன் அவரை மீட்டு மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி, ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குஅவர் இறந்தார்.இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : crash ,
× RELATED இருசக்கர வாகன விபத்தில் சிக்கி பாஜக நிர்வாகி பலி..!!