×

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா நவநீத கிருஷ்ணர் திருக்கோலத்தில் வீதியுலா

உடன்குடி,அக்.15: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவின் 5ம் நாள் விழாவில் நவநீத கிருஷ்ணர் திருக்கோலத்தில் அம்மன் திருவீதியுலா வரும் வைபவம் நடந்தது.
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 5ம் நாள் திருவிழாவை முன்னிட்டு காலை 8மணி முதல் இரவு 7.30மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், மாலை 3மணி முதல் மாலை 5மணி வரை சமயசொற்பொழிவும், மாலை 6மணிக்கு பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடந்தது. இரவு 8மணிக்கு மெல்லிசை நிகழ்ச்சியும், இரவு 9மணிக்கு காமதேனு வாகனத்தில் நவநீதகிருஷ்ணர் திருக்கோலத்தில் அம்மன் திருவீதியுலாவும்
நடந்தது.    
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
கட்டபொம்மன் நினைவு தினம்
கயத்தாறில் டிஎஸ்பி ஆய்வு
கயத்தாறு, அக்.16: வீரபாண்டிய கட்டபொம்மன் 219வது நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு கயத்தாறில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்ச்சி நடக்கும் இடத்தினை கோவில்பட்டி டிஎஸ்பி ஜெபராஜ் ஆய்வு செய்தார்.
 தொடர்ந்து கட்டபொம்மன் நினைவு மணிமண்டபத்தில் நடந்த கூட்டத்திற்கு கோவில்பட்டி டிஎஸ்பி ஜெபராஜ் தலைமை வகித்தார். கயத்தாறு இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தலைவர்கள் வருகை, தேசிய நெடுஞ்சாலையில் பாதுகாப்பு பணிகள், விழா ஏற்பாடுகள் குறித்து, விழா குழுவினரிடம் கலந்து பேசினார். பின்னர் விழா நடக்கும் இடங்கள், வாகனம் நிறுத்துமிடம் ஆகிய இடங்களை ஆய்வு செய்தார்.
 கயத்தாறு விஏஓ ராஜசேகரன், கிராம உதவியாளர் அழகர்சாமி, கயத்தார் ஒன்றிய மதிமுக செயலாளர் கிருஷ்ணசாமி, நகர செயலாளர் கட்டபொம்மன் முருகன், திமுக மாவட்ட சிறுபாண்மை அமைப்பு துணை செயலாளர் கேஎம்ஏ பஷீர், மணிமண்டப பாதுகாப்பாளர் முத்துராமலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : festival ,Kulasekarpapinam Dasara ,Navaneetha Krishna ,
× RELATED நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கோலாகலக் கொண்டாட்டம்… புகைப்படத் தொகுப்பு!