×

ஆழ்கடலில் தங்கி மீன் பிடிக்க அனுமதி விசைப்படகு மீனவர்கள் மனு தூத்துக்குடி,அக்.16: ஆழ்கடல் விசைப்படகு மீன்பிடி தொழில் மேம்பாட்டு சங்கம் சார்பில் போஸ்கோ தலைமையிலானவர்கள் கலெக்டரிடம் அளித்துள்ள மனு:

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் உள்ள விசைப்படகுகள் ஆழ்கடல் சென்று மீன்பிடிக்க அனுமதி கேட்டு வழக்கு தொடர்ந்து இருந்தோம்.
வழக்கை விசாரித்த நீதிபதி விசாரணையின் அடிப்படையில் மத்திய அரசின் கடல் ஒழுங்குமுறை சட்ட விதிப்படி இடைக்கால சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார். அதன்படி இடைகால சான்றிதழ் வழங்கப்பட்டது.
ஆனால் காலை 5 மணிக்கு கடலுக்கு சென்றுவிட்டு இரவு 9 மணிக்குள் கரை திரும்ப வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. இது சட்டத்திற்கு மாறாக இருந்ததால் நாங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இதற்கு இடைகால தடை ஆணை பெற்றோம்.
எனவே இன்று முதல் மீன்வளத்துறை உதவி இயக்குனர் வழங்கிய இடைகால சான்றிதழ்படி ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு செல்ல இருக்கிறோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
திருச்செந்தூரில் இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்
திருச்செந்தூர், அக். 16: குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் ஆபாசமாக நடனமாடுவதை தடைசெய்ய கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் திருச்செந்தூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்து மக்கள் கட்சி மாவட்ட பொது செயலாளர் சண்முகநாதன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சக்திவேல், மாவட்ட அமைப்பாளர் தனலிங்கம், ஒன்றிய தலைவர் இசக்கிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் இந்து சமய ஆர்வலர் நெல்லை மணிகண்டன், இந்து மகா சபா மாநில செயலாளர் ஐயப்பன், இந்து மக்கள் கட்சி மாநில பொது செயலாளர் ரவிகிருஷ்ணன் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் இந்து மக்கள் கட்சி இளைஞர் அணி செயலாளர் சுந்தர், நகர துணை தலைவர் துரைச்சாமி, உடன்குடி ஒன்றிய தலைவர் குணசேகர், உடன்குடி ஒன்றிய செயலாளர் குலசை முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்
டனர்.

Tags : Fisheries Minister ,POSCO ,sea fishermen industry development association ,
× RELATED கச்சத்தீவை மீட்பது தொடர்பான இந்திய...