×

தூத்துக்குடி தூத்துக்குடி மீன்வளக்கல்லூரியில் மாணவர் பேரவை துவக்க விழா

தூத்துக்குடி, அக்.16: தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மாணவர் பேரவை துவக்க விழா நடந்தது.
தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் 2018-19ம் ஆண்டுக்கான மாணவர் பேரவை துவக்க விழா நடந்தது. விழாவிற்கு தூத்துக்குடி டவுண் டி.எஸ்.பி., பிரகாஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
மாணவர் சங்கத்தின் துணைத்தலைவர் மற்றும் பேராசிரியர் ஆதித்தன், மாணவர் சங்க பிரதிநிதிகளுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்து வரவேற்புரை ஆற்றினார். சிவகணேஷ் பொதுச்செயலாளராகவும், செல்வன் தமிழரசன் விளையாட்டு செயலாளராகவும், குருபிரசன்னா இலக்கிய மன்ற செயலாளராகவும், குமாரகண்ணன் நாட்டு நலப்பணித்திட்ட செயலாளராகவும், மதுமிதா கல்லூரியின் இதழ் ஆசிரியராகவும், சுபாஷினி அறிவியல் மன்ற செயலாளராகவும் மற்றும் விமல் குமார்
இணைச்செயலாளராகவும் பதவி ஏற்றுக்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவர் சங்கப் பொதுச்செயலாளர் செல்வன் சிவகணேஷ் நன்றி கூறினார்.
அஞ்சலக வாரவிழா
செய்துங்கநல்லூர், அக்.16: வசவப்பபுரம் நூலகத்தில் தேசிய அஞ்சலக வார விழா நடந்தது.
முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் ஜா தலைமை வகித்தார். உதவி அஞ்சல் கண்காணிப்பாளர்  சுரேஷ் முன்னிலை வகித்தார். கிளை அஞ்சல் அதிகாரி ரேவதி வரவேற்றார். முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் பேசும் போது, ‘சிறு சேமிப்பு வாழ்க்கையில் முக்கியமானது. இதற்காக அஞ்சலகத்தில் கணக்கு துவங்குவது எளிது. 50 ரூபாய் டெபாசிட்டில் கணக்கு துவங்கலாம் என்றார். தொடர்ந்து அதிக கணக்கு துவங்கிய ஏஜெண்டு, கிளை அஞ்சல் அதிகாரி, தபால்காரர் ஆகியோருக்கு பரிசு வழங்கப்பட்டது. உட்கோட்ட அஞ்சல் ஆய்வாளர் பாலாஜி, முன்னாள் துணை சேர்மன் உடையார், மெயில் ஓவர்சீயர் பரமானந்தம், பரமசிவம், கிளை அஞ்சல் அதிகாரி குமார், சங்கரநாராயணன்,  உள்பட பலர் கலந்து கொண்டனர். தபால் பட்டுவாடா அலுவலர் சுப்பையா நன்றி கூறினார்.

Tags : Student council opening ceremony ,Thoothukudi Thoothukudi Fisheries College ,
× RELATED தருவைகுளத்தில் திருப்பயணிகள் இல்லம் திறப்பு