×

உரம் விலை உயர்வை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி, அக்.16: உரம் விலை உயர்வை ரத்து செய்யக்கோரி கோவில்பட்டியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடந்த 2016-17ம் ஆண்டிற்கான பயிர் காப்பீடு விடுபட்ட பயிர்கள், விடுபட்ட விவசாயிகளுக்கு உடன் வழங்கவும், ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும், உரம் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும், உர விலையை நிர்ணயிக்கும் உரிமையை நிறுவனங்களுக்கு வழங்கும் முடிவை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
 தாலுகா அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் லெனின்குமார் தலைமை வகித்தார். அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநில செயலாளர் பாலமுருகன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். மாவட்ட செயலாளர் நல்லையா, ஏஐடியூசி மாவட்ட செயலாளர் தமிழரசன், எட்டயபுரம், ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் தாலுகா செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, அசோக்குமார், வேலாயுதம், சிதம்பரனார் மாவட்ட அச்சக கூட்டுறவு சங்க தலைவர் சங்கரப்பன், மாவட்ட தலைவர் ராமையா, தாலுகா தலைவர்கள் ரவீந்திரன், கிருஷ்ணமூர்த்தி, சந்திரமோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மூக்குப்பீறி பள்ளியில் விளையாட்டு விழா
நாசரேத் அக்.16: நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர்
ஜாண் செல்வராஜ் வரவேற்றார்.
 சேகர குரு ஏரேமியா ஜெபித்து விழாவை தொடங்கி வைத்தார். நாசரேத் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தேசிய கொடியை ஏற்றி மாணவர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
  தூய மாற்கு ஆலய பரிபாலன கமிட்டி தலைவர் சாமுவேல் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்
தார். பள்ளி தாளாளர் செல்வின் விளையாட்டுப் போட்டியைத் தொடங்கி வைத்தார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில் மூக்குப்பீறி முன்னேற்ற ஐக்கிய சங்க தலைவர் அருள்ராஜ், மூக்குப்பீறி உதவி குருவானவர் கிப்டன் மற்றும் மூக்குப்பீறி, தூய மாற்கு துவக்கப்பள்ளி, தூய மாற்கு ஆங்கிலப் பள்ளி, பிரகாசபுரம் தூய மரியன்னை நடுநிலைப்பள்ளி, தேமாங்குளம் நடுநிலைப்பள்ளி, நெய்விளை நடுநிலைப்பள்ளி, பிரகாசபுரம் ஏகஇரட்சகர் நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். ஆசிரியைகள் பாக்கிய செல்வராணி, ஜெபக்குமாரி ஜெசுவடியாள் ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஆசிரியை ஜெபமரிய ஸ்டெல்லா நன்றி
கூறினார்.
ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜேஷ்ஜேக்கப், ஜேஸ்மின் ஏஞ்சல்குமாரி மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.

Tags : price hike ,
× RELATED விலைவாசி உயர்விற்கு ஒன்றிய அரசுதான் காரணம்: ஓபிஎஸ் குற்றச்சாட்டு