×

மத்திய, மாநில ஊழல் ஆட்சிகளை அகற்ற வேண்டும்

நெல்லை, அக். 16:   நெல்லை மாநகர், கிழக்கு, மேற்கு என ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நெல்லையில் நேற்று நடந்தது. முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் தலைமை வகித்தார். மாநகர் மாவட்டத் தலைவர்  சங்கரபாண்டியன், கிழக்கு மாவட்டத் தலைவர் எஸ்கேஎம் சிவகுமார், மேற்கு மாவட்டத்  தலைவர் பழனி நாடார் முன்னிலை வகித்தனர். இதில் அகில இந்திய செயலாளரும், தமிழக தேர்தல் பார்வையாளரும் சஞ்சய்தத் பங்கேற்று மக்களவைத் தேர்தல் குறித்து நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார்.
 அப்போது அவர் பேசுகையில் மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமராக்க அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபாட வேண்டும். பூத் கமிட்டி அமைத்து தேர்தல் பணியை துவக்க வேண்டும். மோடி ஆட்சியில் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஊழலில் சிக்கி மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடிக்கும் மாநில அரசுக்கு மத்திய அரசு ஆதரவாக செயல்படுகிறது. எனவே, இந்த இருஆட்சிகளையும் அகற்ற வேண்டும். இந்த இரு அரசுகளுக்கு மக்களவைத் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்’’ என்றார்.
 முன்னாள் எம்பி பீட்டர் அல்போன்ஸ், தமிழக காங்கிரஸ் பொதுச்செயலாளர் அருள் பெத்தையா, மாநில பொதுக்குழு உறுப்பினர் வானமாமலை, வசந்தகுமார் எம்எல்ஏ. முன்னாள் எம்பி ராமசுப்பு, முன்னாள் எம்எல்ஏக்கள் வேல்துரை, ரவி அருணன், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் வக்கீல் காமராஜ், மாவட்ட பொருளாளர் ராஜேஸ்முருகன், முரளிராஜா, பாளை வட்டார தலைவர் டியூக் துரைராஜ், இளைஞர் காங்கிரஸ் கிழக்குமாவட்ட தலைவர் போத்திராஜ் வினோத், இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஓபேத், மாவட்ட பொதுச்செயலாளர்கள் சொக்கலிங்ககுமார், சபீக், சேக்இப்ராகிம், மாவட்ட துணைத்தலைவர்கள் உதயகுமார், பேட்டை சுப்பிரமணியன், காளை ரசூல், மாவட்ட செயலாளர்கள் சுப்பிரமணியன், கேஎஸ்மனி, கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளர் மீரான்கனி, முன்னாள் கவுன்சிலர் சுடலைக்கண்ணு, விவசாய அணி வாகை கணேசன், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் விபி துரை, இளைஞர் காங். கார்வின், கிளங்காடு மணி, மண்டல தலைவர்கள் தனசிங்பாண்டியன், மாரியப்பன், சிறுபான்மை பிரிவு முகம்மது அனஸ்ராஜா, வக்கீல்கள் பொன்ராஜேந்திரன், பால்ராஜ், முன்னாள் மாவட்ட தலைவர் மோகன் குமாரராஜா, உமாபதிசிவன்  உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : state ,
× RELATED மக்களவைத் தேர்தல்: கேரள மாநிலம்...