×

சென்னை, திருவள்ளூரில் தொடர் கொள்ளை சம்பவம் வாடகை வீட்டில் தங்கி நகை பறித்த பிரபல ரவுடி கைது

திருவள்ளூர், அக். 16: திருவள்ளூர் அருகே வாடகைக்கு வீடு எடுத்து நகை பறித்த பிரபல ரவுடி பூனை பிரகாஷை போலீசார் நேற்று கைது செய்தனர். அவனிடமிருந்த 5 சவரன் நகையை மீட்டனர்.
திருவள்ளூர் அடுத்த செவ்வாப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் அனிதா(26). இவர், கடந்த 8ம் தேதி  தண்ணீர்குளம் அருகே ஸ்கூட்டியில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்தார்.
அந்தநேரத்தில், அவ்
வழியாக சென்ற வாலிபர் ஒருவர், அனிதாவை ஆட்டோவில் ஈக்காட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அப்போது அனிதா, ‘’தான் தண்ணீர்குளம் அருகே விபத்தில் காயம் அடைந்ததாகவும், ஸ்கூட்டியில் ரூ.25 ஆயிரம்  மற்றும் மற்றொரு செல்போன் உள்ளதாகவும் சகோதரருக்கு தனது கையில் இருந்த செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.
இதை கவனித்த இளைஞர், ‘தனது நண்பருக்கு போன் பேச வேண்டும்’ என கூறி அனிதாவிடம் இருந்து செல்போனை வாங்கிக்கொண்டு வெளியே வந்துள்ளார். பின்னர், அவனது நண்பருக்கு போன் பேசி தண்ணீர்குளம் வருமாறு கூறிவிட்டு, அனிதாவின் செல்போனையும் எடுத்துக்கொண்டு அவர் தப்பினார்.
சம்பவ இடத்துக்கு இரு இளைஞர்களும் சென்று பணத்துக்காக விபத்து நடந்த ஸ்கூட்டியை தேடியுள்ளனர். அங்கு ஸ்கூட்டி இல்லாததால் ஏமாற்றத்துடன் அங்கிருந்து பைக்கில் புறப்பட்டனர். தொடர்ந்து, கந்தன்கொள்ளை அருகே செல்லும்போது, நடந்து சென்ற மூதாட்டி பவானி(58) என்பவரின் கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பினர், அப்போது  அனிதாவிடம் திருடிய செல்போன் கீழே விழுந்தது. இதை வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர்கள் கவனிக்கவில்லை. இந்த செல்போனை போலீசார் மீட்டனர்.
இந்நிலையில், செல்போனை திருடிச்சென்ற இளைஞர் மீது அனிதா செவ்வாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
கந்தன்கொள்ளை பகுதியில் நகை பறிப்பில் ஈடுபட்டவர்கள் விட்டுச்சென்ற செல்போனை போலீசார் அனிதாவிடம் காண்பித்தனர். அப்போது, இது தன்னிடம் திருடப்பட்டது என்று அனிதா கூறியுள்ளார். இதையடுத்து, அனிதாவை மருத்துவமனையில் சேர்த்த இளைஞர் குறித்து, மருத்துவமனை சிசிடிவி கேமராவில் பதிவான உருவத்தை வைத்து விசாரித்தனர்.
விசாரணையில், வியாசர்பாடி அருண்குமார், சென்னை சூளை பகுதியை சேர்ந்த ரவுடி பூனை பிரகாஷ் என்பது தெரிந்தது. தொடர்ந்து இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் நேற்று காலை புட்லூர் ரயில் நிலையம் அருகே நின்றிருந்த பூனை பிரகாஷை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
அவனிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், பவானியிடம் 5 சவரன் நகை பறித்ததையும், தன் நண்பரான வியாசர்பாடி அருண்குமாரை, ஏற்கனவே எம்.கே.பி. நகரில் நடந்த வழிப்பறி வழக்கில் இரு நாட்களுக்கு முன் சென்னை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளதையும், கொள்ளையில் ஈடுபடுவதற்காக காக்களூரில் நாங்கள் இருவரும் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்ததாகவும் கூறியுள்ளார்.
தொடர்ந்து கைதான பூனை பிரகாசின் கூட்டாளிகள் யார், மேலும் திருட்டு, கொள்ளை, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டுள்ளாரா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

Tags : Rowdy ,arrest ,Tiruvallur ,house ,Chennai ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...