×

நல்லம்பாக்கம் ஏரிக்கரையை பலப்படுத்த வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல்

கூடுவாஞ்சேரி,அக். 16:  வண்டலூர் அருகே உடையும் நிலையில் உள்ள நல்லம்பாக்கம் ஏரிக்கரையை பலப்படுத்த ேவண்டும் என  பொதுப்பணித் துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வண்டலூர் அடுத்த நல்லம்பாக்கம் ஊராட்சியில் நல்லம்பாக்கம், கண்டிகை, மல்ரோசாபுரம், அம்பேத்கர்நகர், காந்திநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளன. இந்நிலையில், உடையும் அபாய நிலையில் உள்ள நல்லம்பாக்கம் ஏரிக்கரையை பலப்படுத்த வேண்டும் என பொதுப்பணித் துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘’இந்த ஏரியை நம்பித்தான் விவசாயிகள்  விவசாயம் செய்து வருகின்றனர். இதில் பெண்கள் மற்றும் பொதுமக்கள் துணி, துவைப்பதும், குளிப்பதும், ஆடு, மாடுகளை கழுவியும் வருகின்றனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏரியில் மீன் பிடிப்பது வழக்கம்.  இந்நிலையில், ஏரி அருகில் உள்ள விளை நிலங்களை சிலர் அதிக விலை கொடுத்து 700 ஏக்கருக்கு மேல் நிலம் வாங்கி 15 அடுக்குமாடி கொண்ட குடியிருப்புகளை கட்டியுள்ளனர்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று தனியார் நிறுவனத்தினர் மேற்படி ஏரியில் அரசு விதிமுறைகளை மீறி 15அடிக்குமேல் இரவு பகலாக மண் அள்ளினர்.
இதனால் ஏரியில் ஆங்காங்கே மரண பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. ஏரிக்கரை முழுவதும் வேலிக்காத்தான் என்று கூறப்படும் சீமை கருவேல மரங்கள் அடர்த்தியாக காணப்படுகிறது.
இதனால் ஏரிக்கரையில் எளிதில் செல்வதற்காக பயணம் செய்யும் பைக் ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். தற்போது லேசாக பெய்த மழைக்கே ஏரிக்கரையில் ஆங்காங்கே வெடிப்புகள் விட்டு காணப்படுகிறது.மழைக்காலங்களில் ஏரியில் அதிக அளவில் தண்ணீர் தேங்கி ஏரிக்கரை பலம் இழந்து உடைந்தால் மிகப்பெரிய பேராபத்து ஏற்படும். எனவே இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர். 

Tags : Nambambakkam ,lake ,
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு