×

பள்ளி சிறுமிக்கு டெங்கு காய்ச்சல்

காஞ்சிபுரம், அக்.16: காஞ்சிபுரம் கருக்குபேட்டை நாயக்கன் பேட்டை நடுத்தெருவை  சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகள் அபிநயா ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறாள். இந்த சிறுமிக்கு காய்ச்சல் தொடர்ந்து இருந்ததால் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 10 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் ரத்த அணுக்கள் குறைந்து கொண்டே வந்ததால்  காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு ரத்த பரிசோதனை எடுக்கபட்டது. டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் உறுதிபடுத்தபட்டது.
மேலும் ரத்த அணுக்கள்  குறைந்து வந்ததால்  மேல் சிகிச்சைக்காக சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சனிக்கிழமை ஆய்வு கூட்டத்திற்கு வந்திருந்த சிஆர்ஏ குழு தலைவர் சத்யகோபால் பேட்டியின் போது, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் வடகிழக்கு பருவமழை துவங்குவதை  முன்னிட்டு சிறப்பு காய்ச்சல் பிரிவு உடனடியாக அமைக்கப்படும் என உறுதி அளித்தும் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் இன்று வரை சிறப்பு காய்ச்சல் பிரிவு தொடங்கப்படவில்லை.
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் '108 ஆம்புலன்ஸ் வசதி குறைவாக உள்ளதால் அபிநயா என்ற சிறுமியை எந்த மருத்துவ  பாதுகாப்பு கருவியும் இன்றி தனியார் வாடகை காரில் அனுப்பும் அவல நிலை ஏற்பட்டுள்ளது என சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

Tags :
× RELATED மதுராந்தகம் காவல் நிலையம் அருகே...