பழநி வனப்பகுதியில் வரிப்புலி, சிறுத்தை எண்ணிக்கை அதிகரிப்பு

பழநி, அக். 16: பழநி வனப்பகுதியில் வரிப்புலி, சிறுத்தை போன்ற விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

பழநி வனச்சரகம் 18 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவு கொண்டவை. இங்கு விலங்குகள், விலை உயர்ந்த மரங்கள், அரிய வகை மூலிகைகள் அதிகளவு உள்ளன. இவ்வனப்பகுதியில் கடந்த ஜூலை மாதம் 24ம் தேதி முதல் 29ம் தேதி வரை இந்திய புலிகள் கணக்கெடுப்புப்பணி நடந்தது. அப்போது வனவிலங்குகள் நடமாட்டம் அதிகளவு உள்ள பகுதிகள் கண்டறியப்பட்டது.\இதன்படி பழநி வனச்சரகத்தில் 52 இடங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகளவு இருப்பது தெரியவந்தது. இப்பகுதிகளில் 104 தானியங்கி காமிராக்கள் பொருத்தப்பட்டது. இந்த காமிராக்கள் மூல ம் 25 நாட்களுக்கு தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. இந்த கண்காணிப்பு கணக்கெடுப்பு பணியின் மூலம் பழநி வனச்சரகத்தில் விலங்குகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருப்பது தெரியவந்துள்ளது.

குறிப்பாக வரிப்புலி, சிறுத்தை போன்ற விலங்குகள் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. இதுகுறித்து பழநி வனச்சரகர் கணேஷ்ராமிடம் கேட்டபோது கூறியதாவது, கண்காணிப்பு காமிரா பதிவு மற்றும் நேரடி கணக்கெடுப்புகளின் அடிப்படையில் பழநி வனச்சரகத்தில் விலங்குகளின் எண்ணிக்கை கணிசமான அளவு உயர்ந்துள்ளது. \வனவிலங்குகளுக்கு தொந்தரவு இல்லாத சூழல் நிலவியதே இதற்கு காரணம். இதன்மூலம் வனவிலங்குகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. \வனவிலங்குகள் மனித மோதல்கள் தடுப்பதற்காக வனப்பணியாளர்களை கொண்ட சிறப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தீவிர ரோந்துப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: