தர்மத்துபட்டி அரசு பள்ளியில் மழை பெய்தால் முழங்காலுக்கு தண்ணீர் வகுப்பறைகளிலும் ‘விரிவாகும்’ விரிசல் மராமத்து செய்ய மக்கள் மனு

திண்டுக்கல், அக். 16: அரசு துவக்கப்பள்ளி வகுப்பறைகள் பலவீனமாக இருப்பதுடன், மழைநீர் தேங்கி பெரும் சிரமத்தையும் ஏற்படுகிறது எனக்கூறி தர்மத்துபட்டி கிராமமக்கள் திரண்டு வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். கன்னிவாடி அருகே தர்மத்துப்பட்டியில் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த 187 பேர் கல்வி பயின்று வருகின்றனர். கட்டடம் சரியில்லை. மழைநீர் தேங்குவதால் விபத்து அபாயம் உள்ளது எனக்கூறி பெற்றோர் ஆசிரியர் கழகம், கிராமமக்கள் நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர்.

இது குறித்து ஜெயக்குமார் கூறுகையில், ‘‘வகுப்புகளின் மேற்கூரை பெயர்ந்து கிடக்கிறது. ஓடுகள் வெகுவாய் தாழ்ந்து விட்டன. மழை பெய்தால் பள்ளியில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்குகிறது. வகுப்பறை கட்டிட தன்மையும் பலவீனமாக உள்ளது. இதனால் மாணவ, மாணவியர் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதற்காக முன்னரே பலமுறை மனு கொடுத்துள்ளோம். இருந்தாலும் நடவடிக்கை இல்லை. எனவே ஏதேனும் விபரீதம் ஏற்படும் முன்பு பள்ளி கட்டடங்களை சீரமைப்பதும் மழைநீர் தேங்கா வண்ணம் நடவடிக் கை எடு க்க வேண்டும்’’ என்றார்.

Related Stories: