×

அரை நிர்வாணத்துடன் விசாரணை செய்த எஸ்ஐக்கு ₹30 ஆயிரம் அபராதம்

சென்னை, அக். 16: சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார் என்பவர் மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: நான் குடியிருந்து வரும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் பெண் ஒருவர், சென்னை குடிநீர் வழங்கல் வாரியத்தின் மூலம் வழங்கப்படும் தண்ணீர் எனது வீட்டுக்கு முறையாக கிடைப்பதை தடுக்கும் வகையில் செயல்பட்டார். இதுகுறித்து நான் அவரிடம் கேட்டேன். இதையடுத்து அவர், தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து விசாரணைக்காக நான் காவல் நிலையம் சென்றேன். அப்போது, எனது தரப்பு விளக்கத்தை கேட்காமல் என்னை அவதூறாக பேசி அரை நிர்வாணத்துடன் காவல் நிலையத்தில் அமர வைத்தார். எனவே, சப் -இன்ஸ்பெக்டர் விஜயபாண்டியன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த மாநில மனித உரிமை ஆணையத்தின் நீதிபதி துரை ஜெயச்சந்திரன்,  சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாண்டியனுக்கு ₹30 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை தமிழக அரசு மனுதாரருக்கு ஒரு மாதத்துக்குள் வழங்கி விட்டு சப்இன்ஸ்பெக்டரின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்து கொள்ளலாம் என்று மாநில மனித உரிமை ஆணையத்தின் நீதிபதி துரை ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

Tags :
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...