விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் உலக கண் பார்வை தின விழிப்புணர்வு பேரணி

சேலம், அக்.12: உலக கண் பார்வை தினத்தையொட்டி விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில், சேலம் விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனத்திற்குட்பட்ட ‘அலைடு ஹெல்த் சயின்ஸ்’ துறையின் சார்பில் பேரணி நேற்று நடந்தது. பேரணியை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் சுதிர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். சேலம் மாநகர ேபாலீஸ் கமிஷனர் சங்கர், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை தலைவர் டாக்டர் மீனாட்சிசுந்தரம், பல்கலைக்கழகத்தின் இயக்குனர் ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பேரணி நாட்டாண்மை கட்டிடத்தில் தொடங்கி, பெரியார் மேம்பாலம், அண்ணா பூங்கா வழியாக காந்தி ஸ்டேடியத்தில் நிறைவடைந்தது.

பேரணியில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நிறைவு விழாவில்,டீன் டாக்டர் செந்தில்குமார் பேசினார். துணைவேந்தர் டாக்டர் சுதிர் வாழ்த்துரை வழங்கினார். போலீஸ் கமிஷனர் சங்கர், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். விழாவில் பல்கலைக்கழகத்தின் இணை துணைவேந்தர் டாக்டர் மனோகரன், பதிவாளர் டாக்டர் ஜெயகர், கல்வி இயக்குனர் டாக்டர் சபரிநாதன், தேர்வு கட்டுப்பாட்டு ஆணையர்கள் டாக்டர் பிரபாவதி, எம்ரிட்ஸ், டாக்டர் பாலசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர். பேராசிரியர் தமிழ்ச்சுடர் நன்றி கூறினார்.

Related Stories: