×

இடைப்பாடி திமுக அலுவலகத்தில் வாக்குச்சாவடி படிவம் ஆய்வு கூட்டம்

இடைப்பாடி, அக். 12: சேலம் மேற்கு மாவட்ட திமுக நகர. ஒன்றிய செயலாளர்கள் வாக்குச்சாவடி படிவம் ஆய்வுக்கூட்டம், நேற்று இடைப்பாடி திமுக அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்துக்கு மேற்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம் தலைமை வகித்தார். அவைத்தலைவர் கோபால், துணை செயலாளர்கள் சுந்தரம், சம்பத்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் இடைப்பாடி முருகேசன், நெசவாளர் அணி அமைப்பாளர் ஆறுமுகம், நகர செயலாளர்கள் இடைப்பாடி பாஷா, மேட்டூர் காசிவிஸ்வநாதன்,

ஒன்றிய செயலாளர்கள் பூவாக்கவுண்டர், பரமசிவம், நிர்மலா, கவுசிராஜா, ரவிச்சந்திரன், சீனிவாசபெருமாள், பச்சமுத்து, ரவிக்குமார், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் முத்தமிழ்செல்வன், நகர நிர்வாகிகள் மாதையன், தங்கவேலு, ரவிராமலிங்கம், வடிவேலு, சிங்காரவேலு, செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், இளைஞர் அணி மாநில துணை செயலாளர் தாயகம் மணி கலந்துகொண்டு, வாக்குச்சாவடி படிவங்களை ஆய்வு செய்து பேசினார்.

Tags : Office ,DMK ,
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...