×

வீட்டு வாடகை படியை உயர்த்த ஆசிரியர்கள் கோரிக்கை

இடைப்பாடி, அக். 12: இடைப்பாடியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம், வட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் கமலக்கண்ணன் தலைமை வகித்தார். வட்டத்தலைவர் சங்கர், மாவட்ட இணைச்செயலாளர் குப்புராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், கடந்த பல ஆண்டுகளாக இடைப்பாடி வட்டாரத்தில் வீட்டு வாடகைப்படி 2பி யில் ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் பெற்று வந்தனர். இந்நிலையில் தற்ேபாது வீட்டு வாடகை படி கிரேடு 3ல் கணக்கிட்டு, கடந்த 1.10.2017 முதல் குறைத்து வழங்கி வருகின்றனர். இதுகுறித்து கருவூலத்துறை அதிகாரியை பல முறை நேரில் சந்தித்து கேட்ட ேபாதிலும்,

உரிய பதில் தெரிவிக்கவில்லை. இடைப்பாடி வட்டம், ஆடையூர் ஒன்றியம் கல்லுரல் காடு ஊராட்சி ஒன்றிய பள்ளியை எல்லையாக கொண்டு, கடந்த காலங்களில் 2பி யில் வீட்டு வாடகை படி வழங்கப்பட்டு வந்தது. ஆனால், கருவூலத்துறை அதிகாரி, தற்போது இதை ஏற்க மறுத்து, தன்னிச்சையாக வீட்டு வாடகை படியை குறைத்து வழங்குகிறார். இதனால் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கடும் மன உளைச்சலில் உள்ளனர். எனவே, தமிழக முதல்வர் தனி கவனம் செலுத்தி, ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags : Teachers ,
× RELATED கல்வி அதிகாரி நேரடி விசாரணை...