வீடுகளுக்கு பட்டா கேட்டு கலெக்டர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகை

சேலம், அக்.12:  பட்டா கேட்டு சேலம் கலெக்டர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர். சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே நைனாக்காடு பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் தங்களது வீடுகளுக்கு பட்டா கேட்டு முற்றுகையிட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்களை மனு கொடுப்பதற்கு அழைத்து சென்றனர்.

அந்த மனுவில், காடையாம்பட்டி அடுத்த நைனாக்காடு வளவு பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தில் குடிசை வீடு கட்டி வாழ்ந்து வருகிறோம். வீடுகளுக்கான வரியும் தவறாமல் கட்டி வருகிறோம். மேலும் எங்களுக்கு வாக்காளர் அட்டை உள்ளிட்ட அனைத்து அட்டைகளும் உள்ளன. ஆனால் இதுவரை தங்களது வீடுகளுக்கு பட்டா வழங்கவில்லை. இதுகுறித்து பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எங்கள் வீடுகளுக்கு பட்டா அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என மனுவில் கூறியுள்ளனர். இந்த மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

Related Stories: