×

மின்தடை புகார்கள் தெரிவிக்க இலவச தொலைபேசி எண்கள் மின்வாரிய அதிகாரி தகவல்

சேலம், அக்.12: சேலம் மாநகராட்சி, ஆத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஏற்படும் மின் தடை, பழுது சரி செய்ய இலவச தொலைபேசியில் பொதுமக்கள் தெரிவிக்கலாம். இதுகுறித்து சேலம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் மணிவண்ணன் கூறியிருப்பதாவது: அடிக்கடி மரம் உடைந்து மின் தடை ஏற்படும் ஏற்காடு மலைப்பகுதிக்கு, இரண்டு மின் மர அறுவை இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. 69 பிரிவு அலுவலகங்களுக்கு உயரமான மரம் மற்றும் மரக்கிளைகள் அகற்றும் கருவி வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பாக பணியாற்ற அனைத்து களப்பணியாளர்களுக்கும் கையுறையும், இடுப்பு கயிறு மற்றும் இதர பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளது. மின்தடை ஏற்படும் பட்சத்தில், மின்தடையை உடனுக்குடன் சரி செய்ய, சேலம் மின்பகிர்மான வட்டத்தில் வாகனங்கள் தயார் நிலையில் உள்ளது. அனைத்து துணை மின் நிலையங்களிலும்,

தீயணைப்பு கருவிகள் மற்றும் இதர பாதுகாப்பு சாதனங்கள் தயார் நிலையில் உள்ளது. மின்தடை பழுது நீக்கு மையத்தில், மின்தடை குறித்து புகார் செய்ய இலவச தொலைபேசி சேவை நடைமுறையில் உள்ளது. சேலம் மாநகராட்சி, ஆத்தூர் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஏற்படும் மின் தடை மற்றும் பழுது சரி செய்ய 1912, 180042519122 ஆகிய இலவச சேவை தொலைபேசி எண்ணிலும், சேலம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் 9445852300,  சேலம் நகர செயற்பொறியாளர் 9445852090, சேலம் கிழக்கு செயற்பொறியாளர் 9445852310, சேலம் மேற்கு செயற்பொறியாளர் 9445852320, சேலம் தெற்கு செயற்பொறியாளர் 9445852330, வாழப்பாடி செயற்பொறியாளர் 9445852350, ஆத்தூர் செயற்பொறியாளர் 9445852340 ஆகிய  தொலைபேசி எண்ணிகளிலும்  தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags :
× RELATED ₹1.50 லட்சம் கொள்ளை