×

பாவை கல்லூரியில் அரசின் கல்வித்தர மேம்பாடு கருத்தரங்கு

ராசிபுரம், அக்.12:  பாவை கல்லூரியில், அரசு கல்வித்தர மேம்பாடு குறித்த கருத்தரங்கு நடந்தது. ராசிபுரம் பாவை கல்வி நிறுவனங்களில், இந்திய அரசாங்கம் கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்த ஒரு நாள் கருத்தரங்கம் நடந்தது. விழாவிற்கு பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். பேராசிரியர் விஷ்ணுபிரியா வரவேற்றார். சிறப்பு விருந்தினராகவும், கருத்தாளராகவும் புதுடில்லி ஏஐசியின் முன்னாள் இயக்குநரும், அண்ணா பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான பட்னாயக் கலந்து கொண்டு பேசியதாவது: மாணவர்களின் உண்மையான மதிப்பினை அவர்களுக்கு உணர்த்தி, சிறந்த தலைவராக உருவாக்குவதே தரமான கல்வி ஆகும். நாட்டில் 20 சதவீதம் மாணவ, மாணவிகள் மட்டுமே உயர் கல்வியை தொடர்கின்றனர். உயர்கல்வியின் முக்கியத்துவத்தை மாணவ, மாணவிகளுக்கு உணர்த்துவதற்காகவே, இந்திய அரசாங்கம் பல்வேறு திட்டங்களை கொண்டிருக்கிறது.

இயந்திரவியல், கணிப்பொறியியல், கட்டடவியல் போன்ற அனைத்து துறைகளுக்கும், நிதி வழங்கப்படுகிறது. அதனை முழுமையாக பயன்படுத்தி கல்வியின் தரத்தை மாணவர்களின் நலன்களுக்காகவும், அவர்களுடைய வேலை வாய்ப்புத்திறன் மேம்படுத்துவதற்காகவும் பேராசிரியர்கள் ஒருமித்து உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கருத்தரங்கில், மத்திய அரசின் பல்வேறு விதமான நிதி மற்றும் கொடைகள் வழங்கும் அமைப்புகள், அவற்றை பெறுவதற்கான தகுதிகள், அவற்றை அணுகும் விதம் போன்றவை பற்றி விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம் ஆராய்ச்சியாளர்களின் கேள்விகள், சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

Tags : Seminar ,Pavai College ,
× RELATED பள்ளி மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி கருத்தரங்கம்