×

பரமத்திவேலூர் காவிரியில் பேரிடர் மேலாண்மை செயல் விளக்கம்

பரமத்திவேலூர், அக்.12:  பரமத்திவேலூர் காவிரிக்கரையில், தீயணைப்புத் துறை சார்பில், பேரிடர் மேலாண்மை செயல் விளக்க ஒத்திகை நடந்தது. கலெக்டர் ஆசியாமரியம் தலைமை வகித்தார். இந்த ஒத்திகையில், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஒரு பெண்ணை தீயணைப்பு வீரர்கள் மீட்டு ரப்பர் படகு மூலம் கரைக்குக் கொண்டு வந்து காப்பாற்றுவது, மழைக்காலங்களில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டால் வீடுகளில் இருந்து பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற அங்கு கிடைக்கும் பொருட்களை வைத்து தப்பிச் செல்வதற்கான செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும் கூரை வீடுகளில் தீ பிடிக்கும் போது, உள்ளே இருக்கும் குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் விலை மதிப்பற்ற பொருட்களை தீ எரிந்து கொண்டிருக்கும் போதே, தீயணைப்பு துறை வீரர்கள் அலுமினியத்தால் ஆன கவச உடை அணிந்து மீட்பது குறித்து செயல்விளக்கம் காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 40க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறை அலுவலர்களும், பணியாளர்களும் கலந்து கொண்டனர். மாவட்ட தீயணைப்பு அலுவலர் அழகர்சாமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் கண்ணன், தீயணைப்புத்துறை நிலைய அலுவலர்கள் பொன்னுசாமி, சிவக்குமார், நல்லதுரை திருச்செங்கோடு ஆர்டிஓ பாஸ்கரன், பரமத்திவேலூர் தாசில்தார், டிஎஸ்பி ராஜூ மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Demonstration ,
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்