×

தர்மபுரியில் கொய்யா விற்பனை ஜோர்

தர்மபுரி, அக்.12: தர்மபுரியில் ஜம்பு ரக கொய்யா விற்பனை ஜோராக நடந்து வருகிறது.
தர்மபுரி மாவட்டத்தில் கிருஷ்ணாபுரம், நாயக்கன்கொட்டாய், மொரப்பூர், செம்மண்ணஅள்ளி, பொம்மிடி, பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி உள்பட மாவட்டம் முழுவதும் 400 ஏக்கருக்கு மேல் விவசாயிகள் கொய்யா சாகுபடி செய்துள்ளனர். தற்போது, சதைபிடிப்புள்ள புதிய ரக கொய்யா அறுவடை பணி, கிருஷ்ணாபுரம் அருகே தொடங்கியுள்ளது. நாட்டு கொய்யா மற்றும் சாதாரண கொய்யா அதிகபட்சம் 100 கிராம் எடை இருக்கும். ஜம்பு ரக கொய்யா ஒரு பழம் அரைகிலோ முதல் ஒரு கிலோ வரை எடை இருக்கிறது. இந்த கொய்யா பழங்களை தள்ளுவண்டிகளில் தர்மபுரி பகுதியில் விற்பனை செய்து வருகின்றனர். ஒரு கிலோ ₹60க்கு விற்பனை செய்யப்படுகிறது. இவற்றை பொதுமக்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர்.

Tags : Joy ,Guyana ,Dharmapuri ,
× RELATED பாளை நூற்றாண்டு மண்டபத்தில் 24ம் தேதி மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி