×

அறுந்து விழுந்த மின்கம்பிகளை தொடவேண்டாம்

தர்மபுரி, அக்.12:  மழைக் காலங்களில் விபத்துகளை தவிர்க்க, அறுந்த விழுந்துள்ள மின்கம்பிகளைத் தொட வேண்டாம் என மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து, தர்மபுரி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை: காற்று, மழைக்காலங்களில் அறுந்து கீழே விழுந்துள்ள மின்கம்பிகளை தொட வேண்டாம். மேலும், மின்பாதையில் பழுது ஏற்பட்டால், தாங்களாகவே சரி செய்யக்கூடாது. மின் வேலிகளை அமைக்க கூடாது. கால்நடைகளை மின் கம்பத்தில் கட்டி வைப்பது மற்றும் மழைக்காலங்களில் மரங்களின் கீழே நிற்பதை தவிர்க்க வேண்டும். வீடுகள், கட்டடங்கள் மின்சார விதிகளுக்கு உள்பட்டு கட்டமைக்க வேண்டும். மாவட்டத்தில் மின் தடை மற்றும் இதர குறைகளைத் தெரிவிக்க வேண்டிய தொடர்பு எண்கள்: தர்மபுரி (நகரம்) 9445855424, தர்மபுரி ஊரகம் 9445855412, அதியமான்கோட்டை 9445855418, பென்னாகரம் 9445855430, பாலக்கோடு 9445855497, மாரண்டஹள்ளி 9445855504, காரிமங்கலம் 9445855492, அரூர் நகரம் 9445855526, அரூர் ஊரகம் 9445855531, பாப்பிரெட்டிப்பட்டி 9445855545, அரூர் 9445855537, கடத்தூர் 9445855550, பொம்மிடி 9445855557, மொரப்பூர் 9445855568 ஆகிய எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா