×

கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் 25ல் காத்திருப்பு போராட்டம் சத்துணவு ஊழியர் சங்கம் அறிவிப்பு

திருச்சி, அக். 12: கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 25ம்தேதி தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் மாவட்ட தலைநகரங்களில் காத்திருப்பு போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது. தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில மாநாடு திருச்சியில் நேற்று நடந்தது. மாநில தலைவர் சுந்தரம்மாள் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் பேயத்தேவன், பொதுச் செயலாளர் நூர்ஜஹான், திருச்சி மாவட்ட  தலைவர் எலிசபெத்ராணி, செயலாளர் ராஜேந்திரன், மாநில துணைத் தலைவர்கள், மாநில செயலாளர்கள் உள்பட அனைத்து மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாநாட்டில் வருகிற 25ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் காத்திருப்பு போராட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர் பொது செயலாளர் நூர்ஜஹான் நிருபர்களிடம் கூறியதாவது: சத்துணவு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், குடும்ப பாதுகாப்பு பணப்பலன் வழங்க வேண்டும், சத்துணவு அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சமும், சமையலர் மற்றும் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சமும் பணிக்கொடை வழங்க வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள 20 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

சத்துணவு மையங்களுக்கு அரசு மாதந்தோறும் காஸ் சிலிண்டர் வழங்குகிறது. இது 20 நாட்கள் கூட வருவதில்லை. இடையில் காலியாகி விட்டால் அந்த மாதத்திற்கான காஸ் தேவையை சத்துணவு ஊழியர்கள் தான் ஈடுகட்ட வேண்டி உள்ளது. 50 மாணவர்களுக்கு மாதம் 1 காஸ் சிலிண்டர் என்ற விகிதத்தில் காஸ் சிலிண்டர் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 25ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும். அன்று (25ம் தேதி) அனைத்து சத்துணவு மையங்களிலும் ஒரே ஒரு பணியாளர் மட்டுமே பணியில் இருப்பார். மற்றவர்கள் போராட்ட களத்தில் இருப்பார்கள். எங்கள் சங்கத்தை சேர்ந்த சுமார் 75ஆயிரம் பேர் இந்தபோராட்டத்தில் பங்கேற்போம். கோரிக்கை நிறைவேறும் வரை இரவு பகல் என முற்றுகை போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார். பொது விநியோக திட்ட குறைதீர் கூட்டம் திருச்சி, அக்.12:பொது விநியோகத் திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கும், மக்களின் குறைகளைக் கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்யவும், உணவுப்பொருள் வழங்கல் தொடர்பான பொதுமக்கள் குறை கேட்கும் கூட்டம் மாதந் தோறும் நடத்தப்படுகிறது.

அதன்படி, திருச்சி மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை திருச்சி கிழக்கு தாலுகாவில் அரியமங்கலம் ரேஷன் கடையில் திருச்சி கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் தலைமையிலும், திருச்சி மேற்கில் டி.வி.எஸ்-2 ரேஷன் கடையில் திருச்சி ஆர்டிஓ தலைமையிலும், ஸ்ரீரங்கம் ராகவேந்திரபுரம் கடையில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தலைமையிலும், மணப் பாறையில் ஆளிப்பட்டி கடையில் ஸ்ரீரங்கம் ஆர்டிஓ தலைமையிலும், மருங்காபுரி ராஜாப் பட்டி ரேஷன் கடையில் திருச்சி துணைப்பதிவாளர் (பொ.வி.தி) தலைமையிலும்,  லால்குடியில் புள்ளம்பாடி ரேஷன்கடையில் ஆடிஓ தலைமையிலும், மண்ணச்சநல்லூர் ரேஷன்கடையில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவர் தலைமையிலும், முசிறியில் மேலகொட்டம் கடையில் முசிறி ஆர்டிஓ தலைமையிலும், துறையூரில் முருகூர் கடையில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் தலைமையிலும், தொட்டியத்தில் மணமேடு ரேஷன் கடையில் சமூக பாதுகாப்புத் திட்டம் தனித்துணை ஆட்சியர் தலைமையிலும், திருவெறும்பூரில் காட்டூர் ரேஷன் கடையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மண்டல மேலாளர் தலைமையிலும் நடக்கிறது.

எனவே, தொடர்புடைய ரேஷன் கடைகளில் ஏற்படும் பொது விநியோகத்திட்டம் தொடர்பான குறைபாடுகளை மேற்காணும் கூட்டங்களில் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவிக்கலாம் என திருச்சி கலெக்டர் ராஜாமணி
தெரிவித்துள்ளார்.

Tags : Nutrient Employees Union Memorandum ,District Capitals ,25 Waiting Strike ,
× RELATED மாவட்ட தலைநகரங்களில் 26ம் தேதி விவசாயிகள் பேரணி