குடோனில் தீ விபத்து ஆட்டோ உதிரி பாகங்கள் எரிந்து நாசம்

திருச்சி, அக். 12:  திருச்சி கன்டோன்மென்ட் வார்னர்ஸ் ரோட்டை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவருக்கு சொந்தமான குடோன் கருமண்டபம் சக்தி நகரில் உள்ளது. கார்களுக்கு பயன்படுத்தப்பட்ட பழைய ஷீட்டுகள், ஆட்டோக்களுக்கு தேவையான பழைய உதிரி பாகங்கள் இங்கு வைக்கப்பட்டிருந்தன. நேற்று காலை திடீரென குடோன் தீப்பிடித்து எரிந்தது. அருகில் வசிப்பவர்கள் அளித்த தகவலின் பேரில் நிலைய அலுவலர் தனபால் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். எனினும் குடோனில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து சேதமானது. இதுகுறித்து கன்டோன்மென்ட் போலீ

சார் விசாரித்து வருகின்றனர்

Related Stories: