×

ஆண் குழந்தைகளுக்கு இணையாக பெண் குழந்தைகளை வளர்க்க வேண்டும்

திருவாரூர், அக். 12: சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தையொட்டி  திருவாரூரில் நேற்று பள்ளி மாணவிகள் மற்றும் பெண்கள் கலந்துகொண்ட பேரணி நடைபெற்றது. திருவாரூர் ரயில் நிலையத்திலிருந்து இந்த பேரணியை துவக்கி வைத்து டிஆர்ஓ சக்திமணி பேசுகையில், இந்தியாவில் கடந்த 2001 ஆம் ஆண்டில் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 970 பெண் குழந்தைகள்  என்று இருந்தநிலை மாறி 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின் போது 919 என்ற விதத்தில் உள்ளது. இதுவே தமிழ்நாட்டில் 943 என்ற விகிதத்திலும், திருவாரூர் மாவட்டத்தில் 958 என்ற விகிதத்திலும் உள்ளது. பெண் குழந்தைகள் சுமையாக இருப்பார்கள் என்று கருதுவதன் காரணமாக இது போன்ற விகிதாச்சார நிலை மாறி வருகிறது. பெண் குழந்தைகளுக்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சிறந்த திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றன. எனவே ஆண், பெண் குழந்தைகள் இருவரும் சமமானவர்கள் என்று கருதி ஆண் குழந்தைகளுக்கு இணையாக பெண் குழந்தைகளையும் வளர்க்கவேண்டும் என பெற்றோர்களை கேட்டுக்கொள்வதுடன், வரும் காலங்களில் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு ஆயிரம் பெண் குழந்தைகள் என்ற சம நிலை ஏற்பட வேண்டும்  என பெற்றோர்கள் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

 ரயில் நிலையத்திலிருந்து துவங்கிய பேரணியானது தொடர்ந்து பஸ் நிலையம், பனகல் சாலை, தெற்கு வீதி வழியாக நகராட்சி அலுவலகத்தை அடைந்து நிறைவுற்றது. பேரணியில் எஸ்.பி  விக்கிரமன், மாவட்ட சட்டப்பணிகள் ஆலோசனை குழு செயலாளர் கோவிந்தராஜன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் தெய்வநாயகி, ஆர்டிஓ முருகதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர். மன்னார்குடி: சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மன்னார்குடி பஸ்  நிலையத்தில் இருந்து ராஜகோபாலசுவாமி கோயில் வரை பள்ளி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஆர்டிஓ பத்மாவதி பேரணியை துவக்கி வைத்தார். இதில் மன்னார்குடி தாசில்தார் ஸ்ரீ தேவி சிவானந்தம், வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ண மூர்த்தி, வட்டார கல்வி அலுவலர் அறிவழகன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக ஆற்று படுத்தனர் சவிதா, சமூக பணியாளர் அபிராமி, குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் ஜெனிபர் கிரேசி, எஸ்ஐக்கள் சண்முகசுந்தரி, சுப்பையன், குழந்தைகள் இல்ல கண்காணிப்பாளர் குழந்தை தெரசா, சூசை மேரி ஆகியோர் பங்கேற்றனர்.

Tags : children ,
× RELATED 1.25 கோடி குழந்தைகள் உடல் பருமனால்...