×

மன்னார்குடியில் காந்தி பிறந்த நாளையொட்டிகோட்ட அஞ்சல் துறை நடத்திய வினாடி வினா, கட்டுரை போட்டி

மன்னார்குடி, அக். 12: காந்தி  பிறந்த நாளையொட்டி இந்திய அஞ்சல் துறை தஞ்சை கோட்டம் சார்பில் மன்னார்குடியில் பள்ளி மாணவர்களுக்கான வினாடி வினா, கட்டுரை போட்டிகள் நடைபெற்றன.
  காந்தி 150 வது பிறந்தநாளையொட்டி  அஞ்சல் துறை தஞ்சை கோட்டம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான வினாடி வினா மற்றும் கட்டுரை போட்டிகள் மன்னார்குடி தரணி மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது.
இதில் தேசிய மேல்நிலைப்பள்ளி, தரணி மெட்ரிக் பள்ளி, தரணி வித்யா மந்திர், சேரன்குளம் அரசினர் மேல்நிலைப்பள்ளி ஆகிய 4 பள்ளிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.  நிகழ்ச்சிக்கு தரணி மெட்ரிக் பள்ளி இயக்குனர் சேதுராமன் தலைமை வகித்தார். அஞ்சல் துறை மன்னார்குடி துணை கண்காணிப்பாளர் பிரேம்ஆனந்த், ஓய்வு பெற்ற அஞ்சல் துறை துணை கண்காணிப்பாளர் குப்புசாமி. மன்னை தலைமை தபால் அலுவலக தலைமை அஞ்சலர் சண்முகம்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் பித்யூசா வரவேற்றார்.

காந்தியடிகளின் கொள்கைகள் என்கிற தலைப்பில் நடைபெற்ற  வினாடி வினாவும், காந்தி என்னை வழிநடத்துகிறார் என்கிற தலைப்பில் நடைபெற்ற கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அஞ்சல் துறை தஞ்சை கோட்ட முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி பரிசுகள் வழங்கி வாழ்த்தி பேசினார். மன்னை தலைமை தபால் அலுவலக சிஸ்டம் மேலாளர் பாஸ்கரன் நன்றி கூறினார்.
மன்னார்குடி வட்ட அளவில் நடைபெற்ற இப்போட்டிகளில் இருந்து வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் விரைவில் தஞ்சையில் அஞ்சல்துறை தஞ்சை கோட்டம் சார்பில் நடைபெற உள்ள தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்ட அளவிலான  போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.

Tags : birthday post office ,Gandhi ,Mannar ,
× RELATED சொல்லிட்டாங்க…