×

நகராட்சி சொத்து வரி உயர்வை திரும்ப பெற வேண்டி ஆணையரிடம் மனு

திருத்துறைப்பூண்டி, அக். 12: திருத்துறைப்பூண்டி நகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் ரகுராமன், மாவட்ட குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், சாமிநாதன் ஆகியோர் நகராட்சி ஆணையரிடம் கொடுத்த கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது:   திருத்துறைப்பூண்டி நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் அரசாணை 73 வெளியிடப்பட்டுள்ளது. அதில் நகராட்சி வார்டுகள் ஏ, பி, சி என்று 3 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மண்டலத்திற்கும் தனித்தனியாக சொத்துவரி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது . 70 சதவீதத்திலிருந்து 100 சதவீதம் வரை வரி விதிக்கப்பட்டுள்ளது .சொத்து வரி உயர்வை திரும்ப பெற வேண்டும் இதில் பிரிக்கப்பட்டுள்ள ஏ மண்டலத்தில் இணைக்கப்பட்டுள்ள சந்தை கொட்டகை தெரு, ரயிலடி தெரு உள்ளிட்டவைகளை சி மண்டலத்திற்கு மாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கூடுதலாக விதிக்கப்பட்ட சொத்து வரிக்கு எதிர்ப்பு தெரிவிப்பது குறித்து மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : petitioner ,Commissioner ,
× RELATED சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பணி...