×

கால்நடை தீவன உற்பத்தி பயிற்சி

திருவையாறு,அக்.12: திருவையாறு வட்டாரம் வேளாண்மைத்துறை அட்மா சீப்பர்ஸ் திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு குறைந்த செலவில் கால்நடை தீவன உற்பத்தி குறித்த பயிற்சி, தஞ்சை தமிழ்நாடு கால்நடை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடந்தது. கோதுமை, தவிடு, குச்சி தவிடு, தாது உப்புகளின் முக்கியத்துவம், கோ4, கோஎப்எஸ், தீவன சோளம், தீவன உற்பத்தி முறைகள் குறித்து கால்நடை அறிவியல் ஆராய்ச்சி மைய உதவி பேராசிரியர் விஜயானந்த் எடுத்து கூறினார். மேலும் உலர் தீவனம், அடர் தீவனம், கறவை மாடுகளின் தீவன அளவு குறித்து எடுத்து கூறினார். பயிற்சி ஏற்பாடுகளை திருவையாறு வேளாண்மை உதவி இயக்குனர் மோகன், உதவி தொழல்நுட்ப மேலாளர்கள் வெங்கடேசன். பிருந்தா செய்திருந்தனர். முன்னதாக வட்டார தொழில்நுட்ப மேலாளர் மாதாலட்சுமி வரவேற்றார். உதவி தொழில்நுட்ப மேலாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.

Tags :
× RELATED திருவையாறு நூலகத்தில் உலக புத்தக தின விழா