×

கும்பகோணம் சீமாட்டியில் விரிவுபடுத்தப்பட்ட சேலைப்பிரிவு திறப்பு

கும்பகோணம், அக். 12:  கும்பகோணம் சீமாட்டியில் விரிவுப்படுத்தப்பட்ட சேலைப்பிரிவு திறப்பு விழா நடந்தது. சீமாட்டி நிர்வாக இயக்குனர் பஷீர்அகமது தலைமை வகித்தார். தஞ்சை மஹாராஜா சில்க்ஸ் நிர்வாக இயக்குனர்கள் முகம்மது ரபி, ஆசிப் அலி, தொழிலதிபர்கள் முஹம்மது அலி, அன்வர் அலி, சீமாட்டி ரெடிமேட்ஸ் நிர்வாக இயக்குனர் முகம்மது ஜியாவுத்தீன் முன்னிலை வகித்தனர். சீமாட்டி பட்டு, ஜவுளி மாளிகை இயக்குனர் நவீத் நியாஸ் வரவேற்றார். விரிவுபடுத்தப்பட்ட சேலை பிரிவை தொழில் அதிபர் சவுகத் அலி திறந்து வைத்தார்.   விழாவில் சீமாட்டி நிர்வாக இயக்குனர் பஷீர் அகமது பேசுகையில், 1936ம் ஆண்டு கலவை என்கிற கிராமத்தில் துவங்கிய மஹாராஜா, சீமாட்டியின் பாரம்பரிய பயணம் ஆற்காடு, தஞ்சாவூர், மயிலாடுதுறை, கும்பகோணம், ராமநாதபுரம் என துவங்கி 83 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களின் வண்ண கலவையாக உடை தந்து தற்போது ஆடை துறையில் நூல் பரப்பி நிற்கிறது.

மக்கள் கேட்பதையெல்லாம் கொண்டு வந்து கொடுப்பது தான் வெற்றிகரமான வியாபாரம் எனும் எங்கள் நிறுவனர் கற்று தந்த பொன்மொழி தான் எங்களை தாங்கி நிற்கிறது. தரமான ஆடைகள, தலைசிறந்த சேவையை தந்து லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களின் நம்பிக்கை பெற்ற சீமாட்டி பட்டு ஜவுளி ரெடிமேட்ஸ் மேலும் 5,000 சதுர அடியில் சேலைப்பிரிவு மற்றும் சர்டிங், சூட்டிங் பிரிவு மிகவும் விரிவுப்படுத்தப்பட்டு உள்ளது. தீபாவளி பண்டிகைக்காக புதுவரவான அகிரா பட்டு, மெல்லிய இழை நயமும், துல்லிய கலை நயமிக்க சீமராஜா புடவைகள், லெஹங்கா தாவணிகள், குழந்தைகளுக்கான லெக்கின்ஸ், வெஸ்டன் கிராஸ் டாப் மாடல், பேன்ட், சர்ட், கோட் மாஸ்டர் பிளாஸ்டர் மாடல், ஆடவர்களுக்கான அமேசிங் சர்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளோம் என்றார். முன்னாள் நகர்மன்ற தலைவர் ரத்னா சேகர், இன்ஜினியர் முகம்மது ரபி, தொழிலதிபர்கள் செந்தில், அகமது தம்பி, பிர்தோஸ்கான், அட்லஸ் சிராஜூதீன், கிஸ்வா மற்றும் நிர்வாகிகள், வர்த்தக பிரமுகர்கள் பங்கேற்றனர்.

Tags : Kumbakonam ,
× RELATED பேருந்து ஓட்டுனரை தாக்கியவர்களை கைது...