×

வேதாரண்யத்தில் ஜாக்டோ-ஜியோ கூட்டம்

வேதாரண்யம்,அக்.12: வேதாரண்யத்தில் ஜாக்டோ-ஜியோஅமைப்பின் வட்டார கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஜாக்டோ-ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முத்துசாமி தலைமை வகித்தார். கூட்டத்தில் சாலைப்பணியாளர் சங்க மாநில தலைவர் கணேசன் மற்றும் நிர்வாகிகள் ராஜதுரை, எழில்மாறன், மோகன்தாஸ் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நவம்பர் 27ல் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக சேலத்தில் நாளை (13ம் தேதி) நடைபெறும் ஆயத்த மாநாட்டில் அனைவரும் பங்கேற்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags : meeting ,Vedaranyam ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...