×

வரும் 29ம் தேதி தரங்கம்பாடிக்கு வருகை தரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்

செம்பனார்கோவில்,அக்.12: வரும் 29ம் தேதி தரங்கம்பாடிக்கு வருகை தரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என்று செம்பனார்கோவில் ஒன்றிய திமுக ஊராட்சி செயலாளர்கள் கலந்தாய்வு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாகை மாவட்டம், செம்பனார்கோவிலில் செம்பனார்கோவில் ஒன்றிய திமுக ஊராட்சி செயலாளர்கள் மற்றும் ஒன்றிய சார்பு அணி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அவைத்தலைவர் சுப்பையன் தலைமை தாங்கினார்.  மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், முன்னாள் ஒன்றிய செயலாளர் மிசா.மதிவாணன், அவைத்தலைவர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் அப்துல் மாலிக் வரவேற்றார்.  நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் நிவேதாமுருகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அதில் வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கு திமுக தலைவர் ஸ்டாலினை முதலமைச்சராக பதவி ஏற்க வைக்க அனைவரும் அயராது உழைக்க வேண்டும். ஒவ்வொரு ஊராட்சிகளிலும் பூத் கமிட்டி அமைத்து கட்சி உறுப்பினர்களை ஒருசேர இணைத்து வாக்குகளை சேகரிக்க வேண்டும்.

புதிதாக உறுப்பினர்களை சேர்க்க நாள்தோறும் ஊராட்சிகளில் அதற்கான வேலைகளில் ஈடுபட வேண்டும். வருகிற 29ம் தேதி நாகை மாவட்டம், தரங்கம்பாடி வட்டத்திற்கு வருகை தரும் திமுக தலைவர் ஸ்டாலினை கொள்ளிடம் முக்கூட்டிலிருந்து பெருந்திரளாக சென்று வரவேற்று அழைத்து வரவேண்டும். வாக்கு முகவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட அனைத்து பணிகளும் துரிதமாக முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.  இதில் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் கண்ணையன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் செந்தில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சித்திக், தரங்கை பேரூர் செயலாளர் வெற்றிவேல், மாவட்ட பிரதிநிதிகள் நத்தம் வின்செண்ட், தென்னரசன், இளங்கோவன், ஒன்றிய துணை செயலாளர்கள் சத்யராஜ், சிவக்குமார், ஆனந்தன், தாமரைச்செல்விரமேஷ், துளசிரேகாரமேஷ், கணேசன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் மோகன்தாஸ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பாரதி, ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் மகேஷ் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.  முடிவில் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் அன்பழகன் நன்றி கூறினார்.

Tags : MK Stalin ,DMK ,visit ,Tangangambadi ,
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...