×

தோகைமலையில் உற்பத்தியாளர் குழுவினருக்கு பயிற்சி

தோகைமலை, அக்.12:  தோகைமலையில் அட்மா திட்டத்தின் கீழ் உழவர் உற்பத்தியாளர் குழு உறுப்பினர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. கரூர் மாவட்டம் வேளாண்மைத் துறை சார்பில் உழவர் உற்பத்தியாளர்கள் குழு உறுப்பினர்களுக்கு அட்மா திட்டத்தின் கீழ் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. தோகைமலையில் உள்ள கருப்பசாமி கோவில் அருகே நடந்த பயிற்சிக்கு வேளாண்மை துணை இயக்குநர் உமாராணி தலைமை வகித்து பேசுகையில், கூட்டு பண்ணையத்தில் குழுவாக உள்ள விவசாயிகளுக்கு விவசாய தொழில்நுட்ப இயந்திரங்கள் பெறுவதற்கு வங்கியின் மூலம் 100 சதவீதம் மானியத்தில் ரூ.5 லட்சம் வரை நிதி அளிக்கப்படுகிறது. மேலும் மானாவாரி திட்டத்தில் தடுப்பணைகள் அமைப்பதற்கும், உழவு மானியம் வழங்கவும் தோகைமலை ஊராட்சியை தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஆகவே இதில் அனைத்து விவசாயிகளும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என தெரிவித்தார். மேலும் கூட்டுப்பண்ணையம், நுண்ணீர் பாசனம், உழவன் செவிலி போன்ற தலைப்புகளிலும் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியில் வேளாண்மை அலுவலர்கள் அர்சுணன், ஜெயபாரதி, ஷீலாரோஷ், உதவிபொறியாளர் ராமு ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

ஏற்பாட்டை வட்டார தொழில்நுட்ப மேலாளர் பாலசுப்ரமணியன் செய்திருந்தார். பயிர்களை சேதப்படுத்தும் மயில்களை கட்டுப்படுத்த விவசாயிகள் கோரிக்ைககரூர், அக்.12:  பயிர்களை சேதப்படுத்தும் மயில்களை கட்டுப்படுத்த வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். கரூர் அருகே உள்ள நொய்யல், மரவாபாளையம், நடையனூர், கோம்புப்பாளையம், திருக்காடுதுறை, என்புகழூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் நெல், கம்பு, சோளம், எள் வெற்றலை, வாழை, மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர். இப்பகுதியில் ஏராளமான மயில்கள் முகாமிட்டு பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. கடந்த 7ஆண்டுகளாக காவிரி பிரச்னையால் காவிரியாற்றில் தண்ணீர் இன்றி வாய்க்கால்கள் காய்ந்துகிடந்தன. இந்த ஆண்டு கர்நாடக அணைகள் நிரம்பியதால் வந்த நீரைப்பயன்படுத்தி பயிரிட்டுள்ளோம்., ஆயிரக்கணக்கான ஏக்கரில் பல்வேறு பயிர்களை விளைவித்தும் மயில்கள் சேதப்படுத்துவதால் பெரும் இழப்பு ஏற்படுகிறது. வனத்துறையினர் மயில்களை பிடித்து வனப்பகுதிகளுக்கு கொண்டுசென்று விடவேண்டும் என விவசாயிகள்கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : crew team ,
× RELATED தோகைமலையில் உற்பத்தியாளர் குழுவினருக்கு பயிற்சி