×

கழிவுநீர் தேங்குவதை தடுக்ககோரி சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி அலுவலகத்தை மக்கள் முற்றுகை

பொள்ளாச்சி, அக்.12: கழிவுநீர் தேங்குவதை தடுக்க கோரி, சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் நேற்று முற்றுகையிட்டனர்.
 பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட மகாலட்சுமி நகரில் சுமார் 150 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதிக்கு, அதனை சுற்றியுள்ள பல இடங்களில் இருந்து வரும் கழிவுநீர் மகாலட்சுமி நகர் பகுதயை சூழ்ந்து கொள்வதாகவும், இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் நேற்று, மகாலட்சுமி நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், திடீர் என  பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின் அவர்கள் பேரூராட்சி அலுவலர்களிடம், எங்கள் பகுதியில் கழிவுநீர் தேங்குவதுடன்,

குடிநீரில் கழிவுநீர் கலக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு அதிகரித்துள்ளது, மேலும் தெருவிளக்கு எரியாமல் உள்ளது. மேலும் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, பேரூராட்சி அதிகாரிகள், சம்பந்தப்பட்ட இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவர்கள், மகாலட்சுமி நகர் பகுதியில் பிற இடங்களில் இருந்து வந்து கழிவுநீர் கலப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும், தேங்கிய கழிவுநீர் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும், என உறுதி அளித்தனர்.

Tags : siege ,Panchayat Office ,
× RELATED கீழ வெள்ளகால் ஊராட்சி அலுவலக புதிய...