×

ஆட்டுத்தோல் வரத்து சரிவு

பொள்ளாச்சி,அக்.12:    பொள்ளாச்சி காந்தி மார்க்கெட் அருகே தோல்சந்தை செயல்படுகிறது. வாரத்தில் வியாழக்கிழமை நடக்கும் சந்தை நாளில் பொள்ளாச்சி நகர் மற்றும் ஆனைமலை, கோட்டூர், கிணத்துக்கடவு, உடுமலை, மடத்துக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொண்டுவரப்படும் ஆட்டுத்தோல், குறிப்பிட்ட விலை நிர்ணயம் செய்யப்பட்டு ஏலம் விடப்படுகிறது. இந்நிலையில் தற்போது புரட்டாசி மாதம் துவக்கத்தையடுத்து கடந்த இரண்டு வாரமாக ஆட்டுத்தோல் வரத்து குறைந்தது.

இதில் நேற்று நடந்த சந்தைநாளின்போது, சொற்ப எண்ணிகையிலான தோல்கள் விற்பனைக்கு வந்தன. மேலும் இதனை வாங்க வியாபாரிகளும்
அதிகளவு வரவில்லை. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஒரு ஆட்டுத்தோல் ரூ.150 முதல் ரூ.175 வரை ஏலம்போனது. ஆனால், நேற்று நடந்த சந்தை நாளில், ஒரு ஆட்டுத்தோல் ரூ.80 முதல் அதிகபட்சமாக ரூ.125வரை மட்டுமே ஏலம்போனது.  இனி புரட்டாசி முடிந்து தீபாவளி நேரத்தில் தோல் வரத்து அதிகமாக இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு