×

ஓடும் ரயிலில் நகை பறிப்பு வட மாநில கொள்ளையனிடம் கோவை போலீசார் விசாரணை

கோவை, அக்.12:  கோவை உட்பட பல்வேறு பகுதிகளில் ரயில் பயணிகளிடம் நகை பறித்தவரை கோவை போலீசார் கஸ்டடியில் வைத்து விசாரித்து வருகின்றனர். திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் பானுமதி. இவர் கடந்த வாரம் சேலத்திலிருந்து கோழிக்கோடு நோக்கி யஸ்வந்த்பூர் கண்ணனூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்று ெகாண்டிருந்தார்.கோவை அருகே ரயில் சிக்னலில் நின்ற போது இவர் அணிந்திருந்த 10 பவுன் நகையை பறித்த ஒருவர் தப்பினார். கோவை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த நபரை தேடி வந்தனர். இந்நிலையில், அரக்கோணம் அருகே ரயில் பயணிகளிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட வடமாநில கொள்ளையர் ஒருவர் ரயில்வே போலீசில் சிக்கினார். விசாரணையில், இவர் பானுமதியிடம் 10 பவுன் பறித்தது தெரியவந்தது. நாக்பூரை சேர்ந்த இவரின் பெயர் உத்தம்பட்டேல் (32) என்பதும், ஓடும் ரயிலில் நகை பறிப்பதை இவர் தொழிலாக ெகாண்டிருப்பதும் தெரியவந்தது. பல்வேறு மாநிலங்களில் இவர் பயணிகளிடம் நகை பறித்து தப்பியுள்ளார். இவரை போலீசார் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.

இவர் சென்னை, திருச்சி, மதுரை, சேலம், ஜோலார்பேட்டை உட்பட 20க்கும் மேற்பட்ட இடங்களில் ரயில் கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். உத்தம்பட்டேலை கஸ்டடி எடுத்து விசாரிக்க கோவை ரயில்வே போலீசார் கோவை ேஜ.எம்.6 கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதனை தொடர்ந்து 5 நாள் கஸ்டடி விசாரணைக்கு அனுமதி வழங்கப்பட்டது. கோவை ரயில்வே இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் தலைமையிலான போலீசார் உத்தம் பட்டேலை நாக்பூர் ஜாரிபக்கர் உட்பட பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று விசாரித்தனர். இவரிடமிருந்து நகை, பணம் இதுவரை பறிமுதல் செய்யப்படவில்லை. திருடிய நகையை உத்தம்பட்டேல் உடனடியாக விற்று செலவு செய்து விட்டதாகவும், சொத்துக்களை வாங்கியிருப்பதாகவும் தெரிகிறது. கஸ்டடி விசாரணை முடிந்து உத்தம் பட்டேல் இன்று கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படவுள்ளார்.

Tags : Coimbatore ,state ,jewelery ,
× RELATED மழையின்றி வற்றிய குளங்கள்: சரிந்தது நிலத்தடி நீர்மட்டம்