×

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்

விருதுநகர், அக்.12: விருதுநகரில் சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பெண் குழந்தைகளின் உரிமை பாதுகாப்பு குறித்த உறுதி எடுக்கப்பட்டது விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் அமிர்த பவுண்டேசன் சார்பாக விருதுநகர் நகராட்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் முனியசாமி  தலைமை தாக்கினார். அமிர்தா பவுண்டேசன் நிர்வாகி உமையலிங்கம் வரவேற்றார். நகராட்சி மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயஸ்ரீ முன்னிலை வகித்தார். குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக ஒருங்கிணைப்பாளர்குருசாமி, மாவட்ட சுற்றுச் சூழல் ஒருங்கிணைப்பாளர் ராஜா ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில் பெண் குழந்தைகளின் முக்கியத்துவம் மற்றும் பெண்களின் மகத்துவம் பற்றி பள்ளி மாணவிகளுக்கு எடுத்து கூறப்பட்டது.

மேலும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் பற்றி 1098 என்ற தொலைபேசி எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம் என கூறப்பட்டது.  விழிப்புணர்வு   நிகழ்ச்சியில் பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என பள்ளி மாணவிகள் 500க்கும் மேற்பட்டோர் உறுதி மொழி ஏற்றுக் கொண்டார்.
செல்போனில் பேசிய பெண் மின்சாரம் தாக்கி காயம் காளையார்கோவில், அக்.12: செல்போனில் பேசிய பெண் மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தார்.
காளையார்கோவில் ஒன்றியம் அருகே விழாங்காட்டூர் கிராமம் அய்யனார் கோயில் பகுதியை சேர்ந்தவர் முத்துமணி மனைவி கண்ணத்தாள்(44). நூறுநாள் வேலை திட்ட வேலை செய்து வருகிறார். சம்பவ நாளன்று செல்போனில் பேசியவாறு நடந்து சென்றார். அய்யனார் கோயில் சுவற்றை ஒட்டி மின்கம்பி அறுந்து தொங்கியதை கவனிக்காமல் கண்ணத்தாள் சென்றுள்ளார். இதனால் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்தார். சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காளையார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Girl Child Care ,
× RELATED பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்திற்கு விண்ணப்பம்