×

அடிப்படை வசதிகள் செய்துதராத மதுரை மாநகராட்சியை கண்டித்து மண்டல அலுவலகம் முற்றுகை

மதுரை, அக்.12: அடிப்படை வசதிகளை செய்யாத மதுரை மாநகராட்சியை கண்டித்து கிழக்கு மண்டல அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
மதுரை மாநகராட்சியில் 56, 57வது வார்டுகள் சின்னஅனுப்பானடி பகுதியில் அமைந்துள்ளது. இங்கு சாலை வசதிகள் இல்லை. கழிவுநீர் கால்வாய் சுத்தம் இல்லாமல் துர்நாற்றம் வீசி வருகிறது. பாதாள சாக்கடை திட்டத்தையும் முழுமையாக நிறைவேற்றவில்லை. குடிநீரும் முறையாக வழங்கவில்லை.

இந்த அடிப்படை வசதிகளை செய்து தராத மதுரை மாநகராட்சியை கண்டித்து அப்பகுதி மக்கள் கிழக்கு மண்டல அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கட்சியின் பகுதிகுழு செயலாளர் லெனின் தலைமையில் முற்றுகையிட்டனர். பின்னர் ேகாரிக்கைகள் அடங்கிய மனுவை முன்னாள் எம்எல்ஏ நன்மாறன் தலைமையில் மாநகராட்சி உதவி கமிஷனர் நர்மதாவிடம் அளித்தனர். விரைவில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்த பின்னர் அனைவரும் திரும்பிச் சென்றனர்.

Tags : Siege ,Regional Office ,Madurai Corporation ,
× RELATED லஞ்ச ஒழிப்பு போலீஸ் பிரிவு மாநகராட்சியில் துவக்கப்படுமா?