×

ஒட்டன்சத்திரம் பஸ் நிலையத்தை புறக்கணிக்கும் வெளியூர் பஸ்கள் பொதுமக்கள் அவதி

ஒட்டன்சத்திரம், அக். 12: ஒட்டன்த்திரம் பஸ் நிலையத்திற்கு பழநி, கரூர், திருப்பூர், கோவை, மேட்டுப்பாளையம், ஊட்டி, கேரளா, தேனி, மதுரை, திண்டுக்கல், சென்னை, பெங்களூர் ஆகிய நகரகளுக்கு முக்கிய வழித்தடமாக உள்ளது, இந்த பஸ்நிலையத்தில் உள்ளூர் வெளியூர்களுக்கு இரவு மற்றும் பகல் நேரங்களில் தினமும் சுமார் 800க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. இப்பஸ் நிலையத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரி, மாணவிகள் வந்து செல்கின்றனர். பஸ் நிலையத்தில் இரவு நேரங்களில் இரவு 8 மணிமுதல் காலை 9 மணிவரை பஸ்கள் பஸ்நிலையம் செல்லாமல் மெயின் ரோட்டில் பயணிகளை ஏற்றி இறக்கிச் செல்கின்றனர்.

இதனால் ரோட்டை கடந்து பஸ் நிலையம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் ரோட்டை கடக்கும்போது விபத்துகள் ஏற்படுகிறது. பஸ்கள் பஸ்நிலையம் வராமல் செல்வதால் பெண்கள், கை குழந்தைகளை வைத்துக் கொண்டு தகுந்த பாதுகாப்பு இன்றி ரோட்டில் நிற்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இரவு நேரத்தில் பஸ்நிலையத்தில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் திருட்டு, வழிப்பறி, விபசாரம் உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் அதிகளவில் நடைபெறுகிறது. எனவே சம்பந்தப்பட்ட போக்குவரத்து அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுத்து இரவு நேரங்களில் பஸ்களை பஸ்நிலையம் உள்ளே வர தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : bus stand ,disaster ,Ottnancur ,
× RELATED தேனி பழைய பஸ்நிலையத்தில் தற்காலிக நிழற்குடையை மாற்றியமைக்க கோரிக்கை