பழநியில் அறிவியல் கண்காட்சி

பழநி, அக். 12: பழநி அரசு மேகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியில் பல்வேறு பள்ளி மாணவர்களின் படைப்புகள் இடம்பெற்றிருந்தன. பழநி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 46வது ஜவஹர்லால் நேருவின் அறிவியல் கண்காட்சி நடந்தது. பழநி மாவட்டக் கல்வி அலுவலர் கருப்புச்சாமி தலைமை வகித்தார். குருவப்பா மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குப்புசுவாமி வரவேற்றார். பழநி சப்-கலெக்டர் அருண்ராஜ் கண்காட்சியை துவக்கி வைத்து பார்வையிட்டார். கண்காட்சியில் சூரிய ஆற்றலில் மின்சாரம் தயாரித்தல், கழிவு பொருட்களில் மின்சாரம் தயாரித்தல், பஸ்களில் படிக்கட்டுகளில் பயணித்தால் எச்சரிக்கும் கருவி, நீர்மின் நிலைய மாதிரி, மழைநீர் சேகரிப்பு மாதிரி, தானியங்கி ரயில்வே கேட், எளிய முறையில் மீன் வளர்ப்பு, சுனாமி எச்சரிக்கை கருவி தொடர்பான படைப்புகள் பெரிதும் கவர்ந்தன.

கண்காட்சியில் 85 பள்ளிகளைச் சேர்ந்த 160 அறிவியல் படைப்புகள் இடம்பெற்றிருந்தன. ஜேஆர்சி கன்வீனர் சின்ராஜ் உட்பட 3 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் பார்வையிட்டு சென்றனர். நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

Related Stories: