புதிதாக கட்டப்பட்ட தடுப்பணை உடைப்பு

உளுந்தூர்பேட்டை, அக். 12:  விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சேந்தநாடு செல்லும் சாலையில் உள்ளது நரியன்ஓடை. இந்த ஓடையில் மழைகாலத்தில் அதிக அளவு தண்ணீர் வரத்து உள்ளதால், ஒரு பகுதியில் தடுப்பணை அமைத்து மழைநீரை சேகரித்து விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன் தடுப்பணை கட்டப்பட்டது. தேசிய ஊரக வேலை றுதி திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட இந்த தடுப்பணையை யாரோ சில மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தி உள்ளதாக தெரிகிறது. இதனால் தடுப்பணையின் மையப்பகுதியில் விரிசல் ஏற்பட்டு தற்போது உடையும் தருவாயில் உள்ளது.

பல லட்சம் மதிப்பீட் டில் கட்டப்பட்ட இந்த தடுப்பணை சில மாதங்களுக்குள் இடிந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து பொதுப்பணித்துறை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து முற்றிலும் உடைந்து விழுவதற்குள் இதனை சரி செய்து தரமான தடுப்பணையை கட்டித்தர வேண்டும் என இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள்கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: